Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மீன்கள் தூங்குமா? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
[Thursday 2022-03-10 08:00]

மீன்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம். கடலுக்கு அடியில் நம்மால் நம்ப இயலாத வகையிலான பல உயிரினங்கள் வாழ்கிறது. இதில் மீன் வகைகள் மிக முக்கியமானது. மீன்கள் உருவாகி, சுமார் 50 கோடி வருடங்கள் ஆகிறது என்று கூறப்படுகிறது. முதுகெலும்பு உடைய பிற உயிரினங்களை விட மீன்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.

மீன்கள் குளிர் ரத்தப்பிராணிகள். மீன்களின் உடல் வெப்பநிலை, அவை வாழும் நீரின் வெப்பநிலையை பொறுத்து மாறுபடுகிறது. மீன்கள் அனைத்திற்கும் துடுப்புகள் உண்டு. மீன்களின் செதிள்கள், அவற்றின் உடல் பாதுகாப்பிற்கு உதவுகிறது.

மீன்களில் சுமார் 22,000 வகைகள் இருக்கிறது.

ஒவ்வொரு மீன் வகையும், நிறம், வடிவம் மற்றும் எடை போன்றவற்றால் வேறுபடுகிறது. மீன்களுக்கு நுரையீரல் இல்லை. எனவே, அவை தன் வாயால், நீரை உறிந்து அதில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு செவில்கள் வழியே கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும்.

மீன்களுக்கு இமைகள் இல்லாததால், கண்களை திறந்தவாறே தூங்கும். ஆழ் கடலில் வாழும் மீன்கள், தூங்குவதில்லை. மீன்களால் நீரில் உண்டாகும் சிறு அதிர்வுகளையும் துல்லியமாக உணர முடியும்.

மிகவும் சிறிதாக இருக்கும் மீன் கோபி. இதன் எடை 13 மில்லி மீட்டர். நுரையீரல் மீன்கள், நுரையீரல் வழியே சுவாசிக்கிறது. ஆழ் கடலில் ஒளியை உமிழக்கூடிய மீன்கள் வாழ்கின்றன.

பறக்கும் மீன்கள் குறிப்பிட்ட தூரம் தாவிச்செல்லும். மிகவும் அதிக வேகத்தில் செல்லக்கூடிய மீன்கள் Seil Fish. சூரிய மீன், கோடிக்கணக்கில் முட்டைகள் இடும்.

Puffer fish தட்டையாக இருக்கும். ஆனால், எதிரிகளை கண்டால் தண்ணீரை குடித்து உருண்டையாக மாறிவிடும். அதனை பார்த்து எதிரிகள் பயந்து ஓடி விடும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா