Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இந்தியாவில் அறிமுகமான லம்போகினி கார்!
[Wednesday 2022-02-23 16:00]

இந்தியாவில் லம்போகினி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான Lamborghini Huracan EVO Fluo Capsule மாடல் இந்தாண்டின் தொடக்கத்தில் அறிமுகமானது. லாம்போகினியின் இந்த மாடல் ஏற்கனவே வெளியான ஹூராகன் ஈவோ காரின் அப்டேட் தான் எனக் கூறப்படுகிறது. இதன் முதல் யூனிட் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தது. வந்தததுமே சுமார் 7.5 கோடி ரூபாயில் இந்த காரை சென்னையை சேர்ந்த வி.ஜ.பி ஒருவர் தனது மகளுக்கு பரிசாக அளித்து ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

இந்த விஜபி யார் என அந்நிறுவனம் கூற மறுத்துள்ளது. அப்படி என்ன இந்த காரின் ஸ்பெஷல் என கேட்கலாம். அதைப்பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க....

வேகத்தில் சூறாவளியாய் செல்லும் சிசி 5,200 சிசி கொண்ட V10 சிலிண்டர் இன்ஜின். இதன் பவர் 630bhp. அதாவது, இது நம் ஊர் இனோவா மாதிரி சுமார் நான்கரை மடங்கு வேகம் கொண்டதாம்.

டார்க் 600Nm கொண்ட இதில் 7 ஸ்பீடு கியர்பாக்ஸை என்கேஜ்டு செய்தால், வெறும் 2.9 விநாடிகளில் இது 100 கிமீ வேகத்தில் பறக்க ஆரம்பித்துவிடுமாம். வெறும் 9 நொடிகளில் 200 கிமீ–யைத் தொடுமாம் இந்த ஈவோ.

இதன் வேகம் மணிக்கு சுமார் 325 கிமீ என்கிறது லம்போகினி நிறுவனம். நேர் சாலைகளில் இவ்வளவு வேகம் செல்ல முடியும் என்றால் நம்ம ஊர் ரோட்டுக்கு எப்படி செல்லும் என நீங்கள் கேட்கலாம்.

அதற்கு ஈடுகட்டும் விதமாக கிரவுண்ட் கிளியரன்ஸ் கணிசமாக ஏற்றியிருக்கிறதாம் லம்போகினி. 135 மிமீ–ல் இருந்து சுமார் 175 மிமீ வரை ஏற்றியிருக்கிறது.

லாம்போகினியின் சூப்பர் காரின் எடை, 1,422 கிலோ கொண்டது. பொதுவாக, லம்போகினி கார்கள் சுமார் 5 முதல் 6 கிமீ வரை மைலேஜ் தரும். 200 கிமீ இந்த கார் பறந்தாலும் உள்ளே இருந்துகொண்டு டீ சாப்பிட்டுக்கொண்டே செல்ல முடியுமாம்.

அந்தளவிற்கு இதன் சஸ்பென்ஷனை தயார் செய்துள்ளனர். இந்த காரின் சரியான எக்ஸ் ஷோரூம் விலையை லம்போகினி சொல்லவில்லை. ஆனால், இது பழைய ஈவோ மாடலைவிட சுமார் 10% விலை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

மேலும், இறக்குமதி வரி, நுழைவு வரி என கணக்குப்போட்டு பார்த்தால் சுமார் 7.5 கோடிக்கு வாங்கியிருப்பார் அந்தச் சென்னை விஐபி. இன்னும் சில லட்சங்கள் கொடுத்து, இந்த காரின் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியரில் எக்ஸ்ட்ரா மாடிஃபிகேஷன்களும் செய்திருப்பதாகத் தகவல்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா