Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கணவரை ஆன்லைனில் விற்பனை செய்ய முயன்ற வினோத பெண்!
[Friday 2022-02-04 16:00]

கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு ஆன்லைன் மூலம் வாங்குவதும், விற்பனை செய்வதும் சகஜமாகிவிட்டது. ஆனால், நியூசிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவனையே ஆன்லைன் ஏலத்தில் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்த கூத்து அரங்கேறியுள்ளது.

அயர்லாந்தைச் சேர்ந்த லிண்டா மெக்அலிஸ்டர் என்பவர் தனது கணவர் ஜான் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசிக்கிறார்.

அவர் விளையாட்டாக ஆன்லைன் தளம் ஒன்றில் தனது கணவனை விற்பனை செய்வதாக விளம்பரம் கொடுத்துள்ளார். அதில் ரிட்டன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கிடையாது எனத் தெரிவித்த அவர், ஏலம் இப்போது தொடங்குவதாக கூறியுள்ளார்.

மேலும், ஜான் 6 அடி 1 அங்குலம் உடையவர். அவருக்கு வயது 37. படப்பிடிப்பு மற்றும் மீன்பிடிக்க விரும்புவார். மிகவும் நல்லவர் என்ற அந்த ஏல போஸ்டில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை உண்மையென நம்பிய 12 பெண்கள் ஏலத்தில் பங்கேற்று ஜானை வாங்க முயற்சி செய்தனர். இந்த ஏலம் இந்திய ரூபாயில் 5 ஆயிரம் ரூபாய் வரை சென்றது. பின்னர் சில மணி நேரங்களில் அந்த போஸ்டை மெக் அலிஸ்டர் நீக்கினார்.

கணவனை பெண் ஒருவர் ஆன்லைன் ஏலத்தில் விட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா