Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஒரே இரவில் அமெரிக்கருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Monday 2022-01-31 17:00]

அமெரிக்காவில் ஒருவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 426 மில்லியன் டொலர் பரிசு தொகை விழுந்துள்ளது அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் los Angels நகரை சேர்ந்த நபர் ஒருவர் Woodland Hills பிரிவில் இருக்கும் கேஸ் நிலையம் ஒன்றில் லொட்டரி சீட்டு வாங்கியுள்ளார். இதில் அந்த நபருக்கு 426 மில்லியன் டொலர் பரிசு தொகை விழுந்துள்ளது.

இதில் இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த லொட்டரி வாங்கிய நபர் யார் என்பது பற்றிய விவரம் சரி வர தெரியவில்லை. லொட்டரியில் பல மில்லியன் வென்ற நபரை நிறுவனம் தற்போது வலைவீசி தேடிகொண்டிருக்கிறது.

லொட்டரி பரிசு அடித்த அந்த நபர் தனக்கு விழுந்த தொகையை ஒரே தவணையாகவும் வாங்கிக் கொள்ளலாம். அல்லது 29 ஆண்டுகள் தவணை முறையிலும் பெற்றுக் கொள்ளலாம் என California லொட்டரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து California லொட்டரி இயக்குனர் ஜான்சன் கூறியதாவது, இப்படி ஒரு அதிர்ஷ்டம் யாருக்காவது தான் கிடைக்கும். ஆனால் இப்போது அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரியவில்லை.

அவர் விருப்பப்படி தனக்கு கிடைத்த பரிசு தொகையை ஒரே தவணையிலோ அல்லது தவணை முறையிலும் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா