Untitled Document
November 11, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிரித்தானிய மூதாட்டிக்கு வீடு தேடி வந்த அதிர்ஷ்டம்!
[Tuesday 2020-12-22 17:00]

கிறிஸ்துமஸ் நேரத்தில் பிரித்தானியாவில் வாழும் பாட்டி ஒருவருக்கு வீடு தேடி வந்துள்ளது அதிர்ஷ்டம். ஆம், வடக்கு வேல்ஸில் வாழும் Diane Bate (70) என்ற அந்த பாட்டி தனது லொட்டரி டிக்கெட்டை சோதிக்கும்போது, அதில் அவருக்கு பரிசு விழுந்துள்ளது தெரியவந்தது.

ஆனால், இதற்கு முன் Dianeக்கு லொட்டரியில் கிடைத்த அதிகபட்ச பரிசே 100 பவுண்டுகள்தான். ஆனால், இம்முறை, 3.8 மில்லியன் பவுண்டுகள் பரிசு என தெரியவர, உடனே தூங்கிக்கொண்டிருந்த கணவரை எழுப்பி விடயத்தைக் கூறியுள்ளார்.

அவர் சொன்னதையும் நம்பாமல், ஆறு முறை பரிசுத்தொகையை சரிபார்த்த Diane, கடைசியாக தன் பேரப்பிள்ளைகள் அதை உறுதி செய்து சொன்னபிறகுதான் நம்பியிருக்கிறார்.

உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், எனக்கு எல்லாமே இருக்கிறது, ஆனால், கைப்பை மீது மட்டும் எனக்கு ஆசை என்கிறார் Diane எளிமையாக.

ஆனால், பாட்டிக்கு உலகம் சுற்ற ஆசை இருக்கிறது, அதுவும் அவரது உறவினர்கள் வெவ்வேறு நாடுகளில் இருப்பதால், அவர்களை சென்று சந்திக்க Dianeக்கு ஆசையாம். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட விரும்பும் Dianeஉடைய பேத்தி ஒருவருக்கு அடுத்த மாதம் திருமணம்.

அவளுடைய திருமணத்துக்கு தன்னால் செல்லமுடியாது என்றாலும், மறக்க முடியாத அளவில் அவள் தன் திருமணத்தைக் கொண்டாட பேத்திக்கு பணம் கொடுக்கப்போகிறாராம் Diane.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா