Untitled Document
November 11, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
எலிசபெத் மகாராணியை விட அதிக சொத்துக்களை கொண்ட பிரித்தானிய வாழ் இந்திய பெண்!
[Saturday 2020-11-28 18:00]

பிரித்தானிய மகாராணியாரின் சொத்து மதிப்பு 350 மில்லியன் பவுண்டுகள்... ஆனால், பிரித்தானியாவில் வாழும் ஒரு இந்திய பெண், பிரித்தானிய மகாராணியாரைவிட அதிக பணக்காரராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பெண்ணின் பெயர் அக்‌ஷதா மூர்த்தி (40), பிரித்தானிய சேன்ஸலர் ரிஷி சுனக்கின் மனைவிதான் அவர்.

இன்ஃபோசிஸ் நிறுவனரான இந்தியர் நாகவாரா ராமராவ் நாராயண மூர்த்தியின் மகளான அக்‌ஷதாவிடம் இருக்கும் குடும்ப நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு, 430 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.

ஆக, பிரித்தானியாவின் பணக்காரப் பெண்களில் ஒருவரான அக்‌ஷதாவின் சொத்து மதிப்பு பிரித்தானிய மகாராணியாரின் சொத்து மதிப்பைவிட அதிகமாகிறது.

கல்லூரியில் மேல் படிப்பு படிக்கும்போது, அக்‌ஷதா ரிஷியை சந்தித்தார். நட்பு காதலாகி, திருமணத்தில் முடிந்து, இன்று பிரித்தானிய சேன்ஸலரின் மனைவியாக மட்டுமின்றி பிரித்தானிய பணக்காரர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராகவும் ஆகியுள்ளார் அவர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா