Untitled Document
November 11, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா!
[Monday 2020-10-05 08:00]

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா 3 தலைமுறைகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் 2-வது வாரத்தில் திருவிழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று திருவிழா நடந்தது. இதில் விவசாயத்தில் நல்ல மகசூல் வேண்டியும், மழை வேண்டியும் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் நேர்த்திக்கடனாக பலியிடப்பட்டன. இந்த வினோத வழிபாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது.

இந்த திருவிழாவில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. திருவிழா முடிந்து கறி விருந்து மீதியை அங்கேயே புதைத்துவிட்டு சென்றனர். திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்துகொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா