Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
33 வருடங்களுக்கு பிறகு 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்த முதியவர்!
[Friday 2020-07-31 08:00]

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நடைபெறவில்லை. அனைத்து மாநிலங்களும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆல் பாஸ் என அறிவித்தன. அதே நேரத்தில், 33 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் பெயிலாகி வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 51 வயது நபர் இந்த கொரோனாவால் ஆல் பாஸ் ஆகி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நூருதீன் (51). இவர் கடந்த 1987-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொது தேர்வை எழுத தொடங்கினார். அப்போது எழுதிய தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் விடாமுயற்சியாக விண்ணப்பித்து தேர்வு எழுதி வந்தார். பாசாவதற்கு தேவையான 35 மார்க்குக்கு பதிலாக 33, 34 என பெற்று தோல்வியையே தழுவி வந்தார்.

இதற்கிடையே, இந்தாண்டும் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்த போது அனைத்துப் பாடங்களையும் எழுத வேண்டும் என அதிகாரிகள் கூறிவிட்டனர். அதனை ஏற்று அனைத்துப் பாடங்களுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் செலுத்தி விட்டு தேர்வு எழுதும் தேதிக்காக காத்திருந்தார். ஹால் டிக்கெட்டும் வந்து விட்டது. தேர்வு எழுதவும் தயாராக இருந்தார்.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் அனைவரும் பாஸ் என தெலுங்கானா அரசு அறிவித்தது. இதையடுத்து, நூரூதினும் ஆல் பாஸ் ஆகிவிட்டார். இதனையடுத்து அவர் முதல் மந்திரி சந்திரசேகர ராவிற்கு நன்றி என கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா