Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முதலில் விமானத்தை பயன்படுத்தியது ராவணன்தான்: இலங்கை அரசு!
[Sunday 2020-07-19 17:00]

ராமாயணத்தில் சீதையை ஆகாயம் மார்க்கமாக ராவணன் கடத்திச் சென்று இலங்கையில் சிறை வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் ராமர் ராணவனுடன் சண்டையிட்டு சீதையை மீட்பதாக புராணம் கூறுகிறது. இலங்கை அரசு ராவணன்தான் முதன்முதலில் விமானத்தை பயன்படுத்தினார். அவர்தான் உலகின் முதல் விமானி என்று கூறி வருகிறது. இந்நிலையில் இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் ராவணன்தான் முதல் விமானி. இதை நிரூபிக்க தங்களிடம் போதுமான ஆதாரம் இருந்தால் அரசுக்கு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும், அந்த விளம்பரத்தில் ‘‘மன்னர் ராவணன் தொடர்பான டாக்குமென்ட் அல்லது புத்தகம் இருந்தால் அரசிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். புராண மன்னர் மற்றும் தீவு நாட்டின் விமான ஆதிக்கத்தின் இழந்த பாரம்பரியம் ஆகியவற்றை குறித்து அரசு லட்சிய, ஆழமான ஆராய்ச்சியை நடத்துகிறது. அதற்கு உதவிகரமாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளது.

விமான போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் சஷி தனதுங்கே நியூஸ் 18-க்கு கொடுத்துள்ள பேட்டியில் ‘‘மன்னர் ராவணன் ஒரு மேதை. ஆகாயத்தில் பறந்த முதல் நபர் அவர்தான். அவர் ஒரு விமானி. இது ஒரு புராணக்கதை அல்ல. அது உண்மை. இதுகுறித்து விளக்கமான ஆராய்ச்சி தேவை. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதை நாங்கள் நிரூபிப்போம்’’ என்றார். இந்தியாவில் உள்ள பதிப்பில் சீதாவை ராவணன் கடத்தியதாக சொல்லப்படுகிறது. அது தவறு. அவர் ஒரு உன்னத மன்னர் என்று இலங்கை தெரிவிக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா