Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அவுஸ்திரேலியாவில் 8,500 வருடங்களுக்கு முன் நீருக்கு அடியில் வாழ்ந்த பழங்குடிகளின் இடம் கண்டுபிடிப்பு!
[Friday 2020-07-03 08:00]

ஆஸ்திரேலிய நாட்டில் மேற்கு கடலோரத்தில் 8,500 ஆண்டுகளுக்கு முன் பழங்குடியின மக்கள் வாழ்ந்ததாக கருதப்படக்கூடிய இடங்கள், தண்ணீருக்கு அடியில் 14 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருகில் மற்றொரு இடத்தில் 2 மீட்டர் ஆழத்தில் பழங்குடியின மக்களால் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிற கல் கருவிகளையும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இந்த இரு இடங்களும் இன்னும் பழமையானதாக கூட இருக்க வாய்ப்பு உண்டு என்று புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இதையொட்டி பிளிண்டர்ஸ் பல்கலைக்ககழகத்தின் பேராசிரியர் ஜோனத்தான் பெஞ்சமின் கூறுகையில், “பழங்குடியின மக்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் புதைபொருள் சான்றுகளில் பெருமளவு இப்போது தண்ணீருக்கு அடியில் உள்ளது” என குறிப்பிட்டார்.

இந்த ஆய்வுகள் பனியுகத்தில் இருந்து வெள்ளத்தில் மூழ்கிய பண்டைய குடியேற்றங்களை கண்டுபிடிப்பதற்கான கதவைத்திறந்து விட்டுள்ளதாக புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவின் உள்பகுதியில், 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடியினர் வாழ்ந்த தளங்களை ஏற்கனவே புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா