Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாத்தா, பாட்டியை கட்டியணைக்க சிறுமி செய்த செயல்!
[Sunday 2020-05-17 08:00]

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாத்தா, பாட்டியை கட்டியணைக்க நினைத்த சிறுமி செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த 10 வயது சிறுமியான Paige Okray என்பவரின் பாட்டியும், தாத்தாவும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தாத்தா, பாட்டியை கட்டியணைக்க நினைத்த சிறுமி புதிய உத்தி ஒன்றை கண்டுபிடித்தார். அதை தமது தாயாரிடமும் கூறி, இருவரும் இணைந்து பாலீத்தீன் பைகளால் ஆன பெரிய திரையை உருவாக்கியுள்ளனர். அதில் கட்டித் தழுவும் விதமாக கைகளை நுழைத்துக்கொள்ளும் பையையும் பசையால் ஒட்டினார்கள்.

அதன்பின்னர் தாத்தா, பாட்டியை தன் விருப்பம் போல் கட்டியணைத்தார். சிறுமி Paige Okray-ன் செயல் குடும்பத்தினர் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. மட்டுமின்றி அந்த அபூர்வ தருணத்தை தாயார் லிண்ட்சே வீடியோவாக பதிவு செய்து தமது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா