Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்காவில் தாயிடம் சண்டை போட்டுவிட்டு காரை எடுத்து சென்ற 5 வயது சிறுவன்!
[Wednesday 2020-05-06 17:00]

5 வயது சிறுவன் ஒருவன் கார் ஒன்று வாங்க தாயிடம் சண்டைபோடுக்கொண்டு புறப்பட்ட சம்பவம் லாஸ்ஏஞ்சலில் நடந்துள்ளது. உத்தா நெடுஞ்சாலையில், கார் ஒன்று முறையற்ற வகையில் வந்து கொண்டிருந்ததை பொலிசார் கவனித்துள்ளனர். உடனே அதை நிறுத்த முற்பட்ட பொலிசார், அதன் சாரதியை கண்டு நடுங்கி போகினர். அந்த சாரதியிடம் வயது என்ன என்று கேட்டதற்கு அவர், வயது 5என்று தெரிவித்துள்ளார்.

எங்கே செல்கிறாய் என்று கேட்டதும், என் அம்மாவிடம் சண்டைபோட்டுவிட்டேன். எனவே எனக்கு ஒரு Lamborghini வாகனம் வாங்க செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார். உன்னிடம் எவ்வளவு பணம் உள்ளது என்று கேட்டதற்கு $3களை காட்டியுள்ளான். இது குறித்து பொலிசார் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில், அந்த சிறுவன் தாறுமாறாக காரை ஓட்டி வருவதை காணலாம்.

பொலிசார் இது குறித்து தெரிவிக்கையில் “அச்சிறுவன் கிட்டத்தட்ட 5 கிலோ மீற்றர் காரை இயக்கி வந்துள்ளான். காரை நிறுத்திய பின் அச்சிறுவனின் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர். பெற்றோர் கூறுகையில், அச்சிறுவனின் மூத்த சகோதரர் உறங்கும் வேளையில் அவன் இவ்வாறு கார் சாவியை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், பொலிஸ் தரப்பில், இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்”.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா