Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
விசித்திர நோயால் அவதிப்படும் பிரித்தானிய தாயார் - நாளொன்றுக்கு 50 முறை கழிவறையை நாடும் அவலம்!
[Monday 2020-04-27 08:00]

பிரித்தானிய தாயார் ஒருவர் விசித்திர நோயால் நாளுக்கு 50 முறை கழிவறையை நாடிய நிலையில் 10 வாரத்தில் 26 கிலோ எடையை இழந்து மரணத்தின் விளிம்புக்கு சென்று மீண்டுள்ளார். வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் குடியிருக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயாரான 37 வயது Trudi Stonard என்பவர் அதிர்ஷ்டம் காரணமாகவே உயிருடன் இருக்கிறார். அவருக்கு பெருங்குடல் மற்றும் மலக்குடலின் அழற்சியை ஏற்படுத்தும் விசித்திர நோயிருப்பது கண்டறியப்பட்டதாலையே அவர் பிழைத்துள்ளார். வெறும் 10 வாரத்தில் அவரது நிலை கவலைக்கிடமாக மாறியதை அடுத்து, மருத்துவர்கள் சுமார் 6 மணி நேரம் செலவிட்டு, அவரது குடல் பகுதியை நீக்கும் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் இவருக்கு இந்த வியாதியின் துவக்கம் கண்டறியப்பட்டது. சிப்ஸ் பாக்கட் ஒன்றை சாப்பிட்டாலே, கடும் அவதிக்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டார். மருத்துவர்களை நாடிய அவருக்கு, எந்த பலனும் கிடைக்காத நிலையில், ஒரு நாள் காரமான KFC உணவை ஒரு வாய் எடுத்துக் கொண்ட அவருக்கு, மலத்துடன் ரத்தம் வெளியேறியுள்ளது.

அப்போது தான் தமக்கு வேறு ஏதோ பிரச்னை இருப்பதை அவர் உணர்ந்துள்ளார். இதனிடையே 56 கிலோ உடல் எடையுடன் இருந்தவர் 32 கிலோவுக்கு மாறியுள்ளார். நாளுக்கு 50 முறையேனும் கழிவறை சென்று திரும்பும் பரிதாப நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். அதன் பின்னர் தாம் ஆசையாக சாப்பிட்ட அனைத்தும் அவருக்கு கடுமையான வேதனையை அளித்தது. இந்த நிலையில் 2015-ல் குடலின் ஒருபகுதியை நீக்கும் அறுவை சிகிச்சைக்கு அவர் தயாரானார். மட்டுமின்றி, பை ஒன்றை பொருத்திக் கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அவரது குடல் மொத்தமும் புண்ணால் சிதைந்து போயிருந்தது. அதனாலையே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது என மருத்துவர்கள் இறுதியில் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட பகுதி மொத்தவும் அப்புறப்படுத்தியுள்ளனர். தற்போதும் வயிற்றுடன் இணைக்கப்பட்ட பையுடனே அவர் வாழ்ந்து வருகிறார். ஆனால் அந்த கொடிய வலியில் இருங்து காப்பாற்றப்பட்டார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா