Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மரத்தில் சிக்கிய பெண் சிறுத்தை! Top News
[Sunday 2020-04-19 08:00]

மஸ்கெலியா காட்மோர் தம்பேதன்ன தோட்டத்தில், ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தையொன்று (ஸ்ரீலங்கன் டைகர்) 15 அடி உயரமான மரமொன்றில் ஏறி கிளைகளுக்கிடையில் சிக்கி, இறங்க முடியாமல் சுமார் 8 மணிநேரம் தவித்தது. இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தப்பட்டு அது உயிருடன் மீட்கப்பட்டது. மேற்படி தோட்டத்தில் சிறுத்தை சிக்கியிருப்பதை அறிந்த தோட்ட முகாமையாளர் அது தொடர்பில் பொலிஸார் ஊடாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து இராணுவம், பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன், தோட்ட மக்களும் குவிந்தனர். மரக்கறி தோட்டமொன்றில், மிருகங்களிடமிருந்து விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில் போடப்பட்டிருந்த கம்பி வலையிலேயே 5 அடியுடைய இச்சிறுத்தை புலி சிக்கியுள்ளது என்றும், மக்கள் நடமாட்டத்தை கண்டதும் மரத்தின் மீது ஏறியுள்ளது.

மரத்தின் உச்சிக்கே சென்ற பிறகு, வலையில் இருந்த பலகைத் துண்டு, மரத்தின் கிளைகளுக்கிடையில் இறுக, கீழ் இறங்க முடியாமல் சிறுத்தைப் புலி சிக்கிக் கொண்டது. பின்னர், ரந்தெனிகல மிருக வைத்தியசாலையிலிருந்து, மிருக வைத்திய அதிகாரியொருவரும் வரழைக்கப்பட்டு, கீழிருந்து துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தப்பட்டு, சிறுத்தைப்புலி கீழிறக்கப்பட்டது. சிகிச்சைகளுக்காக மினிப்பே மிருக வைத்தியசாலைக்கு சிறுத்தைப்புலி கொண்டு செல்லப்பட்டது. குணமடைந்த பின்னர் சரணாலயத்தில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா