Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கொரோனாவிலிருந்து மீண்ட 97 வயது மூதாட்டி!
[Tuesday 2020-04-14 09:00]

உலகையே அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனா வைரசால் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நோக்கி செல்கிறது. இந்த கொடிய வைரசுக்கு பலியானவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்தான் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை கொரோனா தாக்கினால் அவர்கள் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறப்படுகிறது.

எனினும் சில நாடுகளில் 90 வயதை கடந்த முதியவர்கள் சிலர் கொரோனாவை எதிர்த்து போராடி, அதில் இருந்து மீண்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பிரேசில் நாட்டில் சா பாலோ நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா தாக்கி சிகிச்சை பெற்று வந்த 97 வயதான மூதாட்டி ஒருவர் வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

கினா தால் கொலேட்டோ என்ற அந்த மூதாட்டி கொரோனாவுடன் போராடி வென்றதை சிறப்பிக்கும் விதமாக, அவர் வீடு திரும்பும்போது மருத்துவ ஊழியர்கள் இருபுறமும் அணிவகுத்து, கை தட்டி, உற்சாகப்படுத்தி அவரை வழியனுப்பினர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா