Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கொரோனாவை விரட்ட தனது உயிரை பணையம் வைக்கும் செவிலியர்!
[Friday 2020-04-03 17:00]

கொரோனா என்ற வார்த்தையை கேட்டாலே பலரும் பீதியாகும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தன்னை பணியமர்த்துமாறு ஆண் செவிலியர் கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கனிஷ்க் யாதவ் என்ற ஆண் செவிலியர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அவசர கால சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மருத்துவ கண்காணிப்பாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அவசர கால சிகிச்சை பிரிவில் தாம் பணியாற்றி அனுபவம் பெற்றிருப்பதாகவும், எந்த ஒரு அசாதார சூழலையும் எதிர்கொள்ளும் திறன் தன்னிடம் உள்ளதாகவும்குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மன அழுத்தத்தில் இருப்பதால், அவர்களுக்கு உரிய கவுன்சிலிங்கும் தன்னால் கொடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் தன்னை கொரோனா சிகிச்சை வார்டுக்கு மாற்றி பணியமர்த்த வேண்டும் என்றும், அதற்கான அனுமதியை தர வேண்டும் எனவும் தனது கடிதத்தில் கூறியுள்ளார் கனிஷ்க் யாதவ்.

உலகமே கொரோனாவை கண்டு ஓடி மறையும் நிலையில், தனது உயிரை பணயம் வைத்து கொரோனாவையே விரட்டும் வீரனாக இவர் திகழ்கிறார் என சமூக வலைதளங்கில் இவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையிலும், அதனை பொருட்படுத்தாது தொண்டுள்ளதோடு இந்த பணியை செய்ய கனிஷ்க் யாதவ் முன் வந்திருப்பது அவரின் மனித நேயத்தை உலகிற்கு பறைசாட்டுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா