Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
102 வயதிலும் கோவிட்டை விரட்டிக் காட்டிய பாட்டி!
[Tuesday 2020-03-31 18:00]

கடந்த மார்ச் 6ஆம் நாள் இருதயப் பாதிப்புடன் 102 வயது நிரம்பிய பாட்டி ஒருவர் இத்தாலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கொரோனா நோய்த் தொற்றின் அறிகுறிகளை வெளிப்படுத்த ஆரம்பித்தார். அதனால் அது குறித்த சோதனைக்கு அவர் ஆட்பட, அவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கடுமையான அறிகுறிகள் வெளிப்படாத நிலையில், அவர் எவ்வித சிகிச்சையும் இன்றி அவ்வாறே பேணப்பட்டார். அவரது நோய் எதிர்ப்பு சக்தியே போராடி அவரை நோய்த் தாக்கத்தில் இருந்து விடுவித்திருக்கிறது. ஈற்றில் மார்ச் 26ஆம் நாள் கடந்த வியாழன் அவர் வீடு திரும்பியுள்ளார்.

1917இல் அன்றைய உலகை கபளீபரம் செய்த "ஸ்பானிஸ் யுளு" வைரஸ் தொற்றுக் காலத்தில் பிறந்து, அதையும் கடந்து தற்போது அது போன்றே உலகை ஆட்டிப்படைக்கும் கோவிட்-19 காலத்தையும் கடந்துள்ள, ஒரே ஒருவராக இந்தப் பாட்டியே இருப்பார். இத்தாலி இன்று கோவிட்-19 இன் பலிக்களமாக மாறியிருக்கிறது. இத்தாலியில் மட்டும் இறப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ள நிலையிலும், நம்பிக்கை தருகின்ற பல செய்திகள் அங்கிருந்தும் வெளியாகிய வண்ணமே உள்ளன.

95 வயதுப் பாட்டி ஒருவர் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானாலும் அதில் இருந்து மீண்டு வந்து அதிக வயதில் முழுமையாக தேறியவராக தன்னைப் பதிவு செய்து கொண்டார். இது பல மூத்தவர்களை அங்கு உசுப்பி விட்டது போலும். இந்நிலையில் 102 வயதுப் பாட்டி அவரைக் கடந்து புதிய சாதனையாளராக தன்னை பதிவு செய்துள்ளார். அத்துடன் 101 வயது நிரம்பிய பாட்டா ஒருவரும், இத்தாலியில் கோவிட்-19 தொற்றிக்கு உள்ளாகி அதில் இருந்து மீண்டுள்ளார்.

இவர்கள் ஏனைய மூத்தவர்களுக்கு நம்பிக்கையை வழங்குபவர்களாக இன்று மாறியுள்ளார்கள் எனலாம். 102 வயதுப்பாட்டி எவ்வித கவலையையும் மனதில் ஏத்தாது, சந்தோசமான வாழ்க்கையை மகிழ்வுடன் நாளும் வாழ்வதே அவரது ஆரோக்கியத்தின் பின்புலம் என்கின்றனர். அது அனைவருக்குமான பாடம் எனலாம். வாழ்த்துக்கள் வாழ்க பாட்டிகள் மற்றும் பாட்டா.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா