Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
40 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் பற்றி எழுதப்பட்ட புத்தகம்!
[Friday 2020-03-06 17:00]

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி 40 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு புத்தகத்தில் சொல்லி இருக்கிறார்கள். இந்த நோயை பற்றி ஒரு எழுத்தாளர் 1981ல் தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இவரது பெயர் டீன் கூன்ட்ஸ். அந்த புத்தகத்தின் பெயர் தி ஐஸ் ஆப் டார்க்னஸ். இது ஒரு திரில்லர் கதை. கிறிஸ்டினா இவான்ஸ் என்ற பெண்ணின் மகன் டேனி ஒரு முகாமுக்கு செல்கிறார். அங்கு போன ஒரே மாதத்தில் மகன் இறந்துவிடுகிறார். இந்த தகவல் கிறிஸ்டினாவுக்கு சொல்லப்படுகிறது. இதை அவரால் தாங்கவே முடியவில்லை. மகனின் இழப்பையும் ஜீரணிக்க முடியவில்லை. அதனால், ஒரு வருடத்திற்கு பிறகு மகனுக்கு அந்த முகாமில் என்ன ஆனது என்று கண்டுபிடிக்க முடிவு செய்கிறார். அப்படி முயற்சி செய்யும்போதுதான், தன் மகன் டேனி சாகவில்லை. உயிருடன் ஒரு மிலிட்டரி கேம்பில் ரகசியமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான் என்பதை தெரிந்து கொள்கிறார்.

சீனாவின் வுகானில் ஆய்வகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ் போன்ற ஒரு ஆயுதத்தால் டேனி பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று கிறிஸ்டினாவுக்கு தெரியவருகிறது. இந்த வைரஸ் பற்றி சீன விஞ்ஞானி லீ சென் என்பவர், அமெரிக்க ராணுவத்திடம் சொல்கிறார். அந்த வைரசுக்கு அதாவது ஆயுதமாக கருதப்படும் அந்த வைரசுக்கு “வுகான் 400” என்று பெயரிடுகிறார். இப்படி பல திருப்பங்களுடன் அந்த கதை செல்கிறது. இதில் உள்ள இன்னொரு அதிசயம் என்னவென்றால், வுகான் 400 வைரஸ்தான் கொரோனா என்கிறார்கள்.

அந்த கதையில் வுகான் நகரில் தான் இந்த வைரஸ் துவங்குவது போலவே, இப்போதும் இந்த கொரோனா சீனாவின் அதே வுகான் நகரில்தான் துவங்கி உள்ளது. மற்றொரு ஆச்சரியம் கொரோனா வைரஸ் பற்றி முதல் எச்சரிக்கை விடுத்த டாக்டர் பெயரும் லீ தான். இந்த கொரோனா வார்த்தையும் அதனை முன்கூட்டியே ஒரு எழுத்தாளர் எழுதியதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால், அந்த கதையில் வுகான் 400 வைரஸ் தாக்கி எல்லாரும் இறந்துவிடுவார்கள். ஆனால் கொரோனாவால் அப்படி இல்லை. உயிரிழக்கும் வாய்ப்பு குறைவுதான் என்கிறார்கள். அதேபோல, இன்னொரு செய்தியும் வைரலாகி வருகிறது.

பிரபல அமெரிக்க எழுத்தாளர் சில்வியா பிரவுன் 2008ல் எண்ட் ஆப் டேஸ் என்ற புத்தகம் எழுதியுள்ளார். இதில் அவர் ஒரு நோயை பற்றி சொல்கிறார். அதாவது “2020-ம் வருடத்தில் நிமோனியா போன்ற ஒரு நோய் வரும். அது உலகம் முழுவதும் பரவும். நுரையீரல்களையும் சுவாச குழாய்களையும் நாசம் செய்து அது பலருக்கு எமனாக முடியும். எந்த மருந்தாலும் அதை கட்டுப்படுத்தவோ, ஒழிக்கவோ முடியாது. எந்த வேகத்தில் இந்த நோய் பரவுமோ, அதே வேகத்தில் அது மறைந்தும் விடும்“ என்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா