Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஒன்பது வயது மகனுக்கு மின்னளுத்தியால் சூடு வைத்த தாய்: காத்தான்குடியில் சம்பவம்!
[Tuesday 2020-02-25 18:00]

காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஊர் வீதியில் வசித்து வரும் சிறுவனொருவன் சிறுவனின் தாய் சூடு வைத்த காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை சென்ற அப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அப்பாடசாலையின் அதிபரை சந்தித்து இங்கு தரம் 4ல் கல்வி கற்கும் 9 வதுடைய குறித்த சிறுவன் ஒருவனுக்கு அச்சிறுவனின் தாய் மின்னளுத்தியால் சூடு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த பாடசாலை அதிபரும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் மாணவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை பார்க்க முற்பட்டபோது முதலில் மறுத்த தாய் பின்னர் மகனை காண்பித்துள்ளார். உடலில் பலத்த காயங்களுடன் காணப்பட்ட சிறுவனை அழைத்துக் கொண்டு அதிபரும் ஆசிரியரும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதனையடுத்து ஆரம்பக்கட்ட சிகிச்சை மற்றும் விசாரணைகளையடுத்து சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். குறித்த சிறுவன் கடந்த சனிக்கிழமை மதரசாவுக்கு செல்லாமல் தூக்கத்தில் இருந்துள்ளான். இதன்போது சிறுவனின் தாய் சிறுவனை குர்ஆன் மதராசாவுக்கு செல்லுமாறு வற்புறுத்திய நிலையில் சிறுவன் அங்கு காணப்பட்ட மின்னளுத்தியை எடுத்து தூக்கி எறிந்துள்ளான்.

இதையடுத்து ஆத்திரமடைந்த தாய் மின்னளுத்தியை சூடாக்கி சிறுவனின் உடம்பின் பல இடங்களில் சூடு வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மூன்று தினங்களாக எந்தவொரு சிகிச்சையும் சிறுவனுக்கு செய்யாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததாகவும் தெரிய வருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை வழங்கியுள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா