Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்காவில் பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி!
[Friday 2020-01-17 17:00]

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள ஹேவுட் கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷனா ஸ்டேமி. இவர் ஜிப்சி எனும் பெயருடைய ஜெர்மன் ஷெப்பர்டு ரக வகையைச் சார்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய் இன்று காலை 8 குட்டிகளை ஈன்றது. அவற்றில் 4 வதாக பிறந்த ஒரு ஆண் நாய்க்குட்டி பச்சை நிறத்தில் இருந்ததை கண்டு அதன் உரிமையாளர் ஆச்சரியமடைந்தார். இதையடுத்து அந்த குட்டியை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றினர். இது தற்போது வைரலாகி வருகிறது.

இது குறித்து விலங்கின ஆய்வாளர்கள் கூறுகையில், ‘அந்த நாய்க்குட்டியின் நிறத்திற்கு சாதாரண விளக்கங்கள் தர முடியும். உதாரணமாக, நாய்க்குட்டி வயிற்றுக்குள் இருந்தபோது தாயின் கர்ப்பப் பையிலிருந்து வந்த திரவம் அந்த குட்டியை கறை படுத்தியிருக்கலாம். ஆனால் அது எந்தவிதமான கதிர்வீச்சிற்கும் உட்படவில்லை’ என தெரிவித்தனர். ‘பச்சை நிற குட்டி மற்ற குட்டிகளைப் போல சாதாரணமாகவெ உள்ளது. அந்த குட்டிக்கு ‘ஹல்க்’ என பெயரிட்டுள்ளோம்’ என அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா