Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
750 கோடி ஆண்டுகள் பழமையான துகள்கள் புவியில் கண்டுபிடிப்பு!
[Tuesday 2020-01-14 16:00]

விண்கல் ஒன்றை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள், சூரியக் குடும்பத்தைவிட பழமையான, புவியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பழமையான துகள்களைக் கண்டறிந்துள்ளனர். 1960களில் பூமியில் விழுந்த இந்த விண்கல்லின் உள்ளே தூசித்துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை சுமார் 750 கோடி ஆண்டுகள் பழமையானவை. சூரியனுடைய வயது சுமார் 460 கோடி ஆண்டுகள் என்பதையும், புவியின் வயது சுமார் 454 கோடி ஆண்டுகள் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த துகள்கள் நமது சூரியக் குடும்பத்தைவிட எவ்வளவு வயது முதிர்ந்தவை என்பது புரியும். இந்த துகள்கள் சூரிய குடும்பம் தோன்றும் முன் இருந்த நட்சத்திரங்களில் உருவானவை. முர்ஷிசன் விண்கல்லில் இருந்த சூரியனை விட பழமையான துகள்களில் சில (உள்படம்). முட்டை நெபுலா (படம்) போன்றதொரு நட்சத்திரத்தில் இருந்து இது வந்திருக்கலாம்.

நட்சத்திரங்கள் இறக்கும்போது, அவற்றின் துகள்கள் விண்ணில் வீசி எறியப்படும். அப்படி எறியப்பட்ட துகள்கள்தான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 750 கோடி வயதுடைய துகள்கள். சரி. இந்த துகள்கள் எவ்வளவு பழமையானவை என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள்? விண்வெளியில் அண்டக் கதிர்கள் (Cosmic rays) எவ்வளவு காலம் இந்தத் துகள்களில் விழுந்துள்ளன என்பது ஆராயப்பட்டு, அதை பொருத்தே அவை எவ்வளவு பழமையானவை என்று கண்டறியப்பட்டன.

நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ் கல்வி நிறுவனத்தின் சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகளை ஓர் ஆய்வாளர் குழு விவரித்துள்ளது. இவை நட்சத்திரங்களின் உறுதியான மாதிரிகள், உண்மையான நட்சத்திர தூசிகள் என்று கூறியுள்ளார் சிகாகோ ஃபீல்டு மியூசியம் என்ற அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் பிலிப் ஹெக். சிகாகோ பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான இவர், இந்த ஆய்வின் முன்னோடி ஆசிரியர். 1969ல் ஆஸ்திரேலியாவில் விழுந்த முர்ஷிசன் விண்கல்லின் ஒரு பாகத்தில் இருந்த சூரியனைவிட பழமையான 40 துகள்களை இந்த ஆய்வுக்குழு ஆராய்ந்தது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா