Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சிறிய ஆணியை வைத்து 930,000 யூரோக்கள் வரை இழப்பை ஏற்படுத்திய நபர்!
[Saturday 2020-01-11 17:00]

ஒரு சிறு ஆணியுடன் பிடிபட்ட ஒருவரால் 930,000 யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பவேரியாவில், 2018ஆம் ஆண்டு பிப்ரவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையில் பல கார்கள் ஆணியால் கீறப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. சுமார் 642 கார்கள் வரை சேதப்படுத்தப்பட்டதால், 930,000 யூரோக்கள் வரை இழப்பு ஏற்பட்டது. யார் இதைச் செய்வது என்று கண்டுபிடிக்க முடியாமல் பொலிசார் திணறிவந்தனர். கடைசியில், ’paint scraper’ என்ற பெயரில் தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடிவந்தனர்.

இந்நிலையில், யாரோ தனது வீட்டுக்கு வெளியே காரை கீறும் சத்தம் கேட்ட ஒரு நபர் பொலிசாரை அழைக்க, விரைந்து வந்த பொலிசார் சம்பவ இடத்தில் ஆணியுடன் நின்ற ஒருவரைக் கைது செய்தனர். உண்மையில், அந்த நபர் 1,700 வாகனங்கள் வரை சேதப்படுத்தி, 2.3 மில்லியன் யூரோக்கள் வரை இழப்பு ஏற்படுத்தியிருக்கலாம் என்று பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஆனால், அதை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் இல்லாததால், நீதிமன்றம் அந்த புகாரை தள்ளுபடி செய்துவிட்டது. தற்போது, 642 கார்கள் சேதப்படுத்தப்பட்டதற்கான குற்றச்சாட்டை மட்டும் விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா