Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
துயரத்தில் முடிந்த வெளிநாட்டு கனவு: உயிரிழந்த சிவரஞ்சனின் துயரப் பயணம்!
[Wednesday 2020-01-08 20:00]

துருக்கியிலிருந்து கிறீஸ் எல்லைப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த வடமராட்சி இளைஞர் தொடர்பிலான மேலதிக விபரங்கள் வெளிவந்திருக்கின்றன. மில்லடி, கல்வத்தை, கரவெட்டி, வடமராட்சி என்ற முகவரியைச் சேர்ந்த மயில்வாகனம் சிவரஞ்சன் (வயது 37) என்ற இளைஞர் வியாபார தொழில்களில் ஈடுபட்டுவந்திருக்கின்றார். இந்தியாவிலிருந்து புடைவை கொண்டுவந்து விற்பனை செய்வது உட்பட்ட தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றார். ஐந்து சகோரர்களை உடைய அவரின் தந்தையார் ஒரு விவசாயி. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு செல்வதாக சிவரஞ்சன் புறப்பட்டுச் சென்றிருக்கின்றார். அவர் சென்றதில் இருந்து இரண்டு முறை மட்டுமே உறவினர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளதாக வீட்டார் தெரிவித்துள்ளனர். லண்டனில் உள்ள சிலருடைய ஏற்பாட்டிலேயே குறித்த வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லும் முகவர் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளார். சிவரஞ்சனின் தொடர்பு அற்றுப்போன நிலையில் அவரை தொடர்புடுத்தித் தருமாறு முகவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது தொலைபேசி சமிக்ஞை இல்லாத பகுதிகளில் பயணிப்பதால் அவருடன் தொடர்புகொள்ளமுடியாது என்று முகவர் பதிலளித்துவந்திருக்கின்றார்.

கடந்த வருடம் 31ஆம் திகதியே குறித்த இளைஞர் உயிரிழந்திருப்பதாக துருக்கி அதிகாரிகள் உரையாடிய தகவலின் அடிப்படையில் தெரியவந்திருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் குறித்த இளைஞர் துருக்கியில் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். வைத்தியசாலையில் இருந்தபோது அங்கிருந்த இன்னொருவருக்கு தன்னுடைய வீடு குறித்த தகவல்களை வழங்கியிருக்கின்றார். தகவல்களைப் பெற்றுக்கொண்டிருந்த குறித்த நபர் மரணத்தின் பின்னர் பொலிஸாரிடம் கையளித்திருக்கின்றார்.

அதன் பின்னர் துருக்கி தூதரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டு, துருக்கி அதிகாரிகள் நேரடியாக சிவரஞ்சனின் குடும்பத்தாரிடம் நேரடியாகத் தொடர்புகொண்டு இளைஞரின் மரணம் குறித்த தகவலை வழங்கியிருக்கின்றனர். இந்நிலையில் இளைஞரின் சடலத்தை தாயகம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு அரச திணைக்களங்கள் ஊடாக குடும்பத்தினர் கோரியிருக்கின்றனர். இந்நிலையில் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகிறது.

துருக்கி - கிறீஸ் எல்லைப்பகுதிகளைக் கடக்கும் போது மலைகளையும், நீர்நிலைகளையும் தாண்டுவது உயிர் ஆபத்தானது என்றாலும் அதனை தொடர்ந்தும் முகவர்கள் பயன்படுத்துவதால் ஏராளமான உயிரிழப்புக்கள் நிழ்ந்துவந்திருக்கின்றன. இவ்வாறான பாதை ஊடான பயணத்தின் போது முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் வீரகேசரி பத்திரிகையின் உதவி ஆசிரியரும் யாழ்ப்பாணம் மாதகல் கிராமத்தைச் சேர்ந்தவருமான அஸ்வின் சுதர்சன் என்பவரும் உள்ளடங்கலாக பல உயிரிழப்புக்கள் நிகழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா