Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்காவில் சோளத்தால் நிரப்பப்பட்ட தண்டவாளம்! Top News
[Wednesday 2020-01-08 18:00]

கனடா பசிபிக் ரெயில்வே அந்நாட்டின் ஆல்பெர்டா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதன் வழித்தடம் கனடாவிலிருந்து அமெரிக்காவின் சில முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களான சிகாகோ, நியூயார்க் நகரங்களிலும் இந்த ரெயில் சேவை உள்ளது. இந்நிலையில், அமெரிக்கா- கனடா நாடுகளின் எல்லையையொட்டி அமைந்துள்ள அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள கிரிஸ்டல் நகரின் வழியே செல்லும் கனடா பசிபிக் ரெயில்வே வழித்தடத்தில் நேற்று சோளம் சிந்தப்பட்டு தண்டவாளம் முழுவதும் மூடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கிட்டத்தட்ட 0.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு சோளத்தால் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ‘அவ்வழியே சென்ற சரக்கு ரெயிலில் இருந்து தானியம் சிந்தியிருக்கலாம். சிந்திய சோளத்தின் மதிப்பு 3,465 டாலர்கள் (ரூ.2.50 லட்சம்) ஆகும். தண்டவாளத்தில் இருந்து சோளத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளோம்’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா