Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்பு பணிக்காக நிர்வாண புகைப்படங்களை அனுப்பி ரூ.5 கோடி சேகரித்த அழகி!
[Tuesday 2020-01-07 18:00]

கைலன் வார்ட் (20) என்ற அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டா மாடல் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அதிகம். இவர் கடந்த 4-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில், என்னுடைய நிர்வாண புகைப்படங்களை தனிப்பட்ட நபர்களுக்கு அனுப்புகிறேன். அதற்காக அவர்கள் 10 டாலர் அனுப்ப வேண்டும். இந்த தொகை ஆஸ்திரேலியா காட்டுத்தீ மீட்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார். அவருக்கு இரண்டே நாட்களில் 7 லட்சம் டாலர் வசூல் ஆகியுள்ளது. இந்திய மதிப்பில் இது. ரூ.5 கோடி ஆகும். இது குறித்து மீண்டும் பதிவிட்ட அவர், இது உண்மைதானா? என் ட்வீட்டின் எதிரொலியாக ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்புப் பணிக்கு 7 லட்சம் டாலர் வசூல் ஆகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதேவேளையில் வசூல் செய்த பணத்தை கைலன் காட்டுத்தீ மீட்புப்பணிக்கு பயன்படுத்தாமல் ஏமாற்றுவதாக புகார்களும் எழுந்தன.

அதற்கு பதிலளித்த அவர், கரீபியனில் விடுமுறைக்கு வந்தபோது, ஆஸ்திரேலியாவின் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரையோரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட தீ பற்றி தெரிந்து வேதனை அடைந்தேன். என் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. நான் வசூல் செய்த பணத்தை எனக்காக பயன்படுத்தவில்லை.

வேண்டுமென்றால் பணம் அனுப்புபவர்கள் ஆஸ்திரேலியா காட்டுத்தீ மீட்பு நிவாரண நிதிக்கு நேரடியாகவே அனுப்பலாம். அதற்கான ஆதாரத்தை மட்டும் எனக்கு அனுப்புங்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கைலன் வார்டின் இன்ஸ்டா பக்கத்தை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. புதிய முயற்சி மூலம் காட்டுத் தீ மீட்புப் பணிக்கு பணம் வசூல் செய்யும் கைலன் வார்ட்டுக்கு சிலர் பாராட்டுகளையும், சிலர் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா