Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தாய்லாந்தில் 113 மில்லியன் ஆண்டு பழமையான ராட்சத டைனோசர் எச்சங்கள் கண்டுபிடிப்பு!
[Friday 2026-05-15 17:00]

சுமார் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும் பிரம்மாண்டமான தாவர உண்ணி டைனோசர் இனத்தின் எச்சங்கள் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். “நாகடைட்டன் சையஃபுமென்சிஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய டைனோசர் இனம், தென்கிழக்கு ஆசியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சௌரோபாட் இனத்தைச் சேர்ந்த இந்த டைனோசர், நீண்ட கழுத்து, நீண்ட வால், சிறிய தலை மற்றும் தூண் போன்ற நான்கு கால்களைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் உடல் நீளம் சுமார் 90 அடி (27 மீட்டர்) வரை இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்த இந்த உயிரினத்தின் புதைபடிவங்கள், தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சையஃபுமென்ச் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமவாசியால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, டைனோசரின் புஜ எலும்பு மற்றும் தொடை எலும்பின் அளவுகளை அடிப்படையாகக் கொண்டு அதன் எடை சுமார் 25 முதல் 28 டன் வரை இருந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் தலை மற்றும் பற்கள் மீட்கப்படாத போதிலும், மற்ற சௌரோபாட் இனங்களைப் போலவே இலைகள் மற்றும் ஊசியிலை மரங்கள் போன்ற தாவரங்களை அதிகளவில் உணவாக எடுத்துக்கொண்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com



பிரித்தானியாவின் 250 பேர்கள் மட்டுமே வசிக்கும் தீவு ஒன்றில் ஹன்டாவைரஸ் பாதிப்பு!
[Friday 2026-05-08 16:00]

உலகிலேயே மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட, 250 பேர்களைக் குடியிருப்பாளர்களைக் கொண்ட தீவான 'டிரிஸ்டன் டா குன்ஹா'வில், மூன்றாவது பிரித்தானியருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. இரண்டு பிரித்தானியருக்கு ஹன்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமை வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. தற்போது மூன்றாவது நபருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏப்ரல் 24 அன்று, ஏழு பிரித்தானியர்கள் எம்வி ஹோண்டியஸ் கப்பலில் இருந்து அருகிலுள்ள செயின்ட் ஹெலினா தீவில் இறங்கியுள்ளனர்.



உயிர் பலி வாங்கும் பேய் பங்களா: பொலிசார் கண்டுபிடித்த உண்மை!
[Thursday 2026-04-30 16:00]

அஹமதாபாதிலுள்ள பங்களா ஒன்றில் பேய் நடமாடுவதாகவும், அது உயிர் பலி வாங்குவதாகவும் செய்திகள் பரவத்துவங்கின. அவற்றை மூட நம்பிக்கை என்று விட்டுவிடாமல் பொலிசார் துவக்கிய ரகசிய விசாரணை ஒன்று, 34 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த குற்றச்செயல் ஒன்றை வெளிக்கொணர்ந்துள்ளது. அஹாதாபாதிலுள்ள வீடு ஒன்றில் பேய் உலாவுவதாகவும், அது உயிர் பலிவாங்குவதாகவும் செய்திகள் பரவத்துவங்கியுள்ளன. அந்த வீட்டில் வாழ்ந்துவந்த ஷம்சுதீன் 2015இல் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஷாலியாபீவி பதான் மற்றும் ஜவ்ராவாலா ஆகிய இருவர் உயிரிழந்துள்ளார்கள்.



107-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கனடியர்!
[Wednesday 2026-04-29 17:00]

கனடாவின் மிசிசாகாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 107ம் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். 100 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற்கு நல்ல பழக்கவழக்கங்கள் மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்கள். அதற்குச் சிறந்த உதாரணம், கனடாவின் மிக வயதான மனிதர்களில் ஒருவரான இவான் வின்னிச்சுக் திகழ்கின்றார். செவ்வாய்க்கிழமை அன்று மிசிசாகாவில் உள்ள தனது இல்லத்தில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ இவான் தனது 107-வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார்.



வரலாற்றில் முதல்முறை: நிலவின் ஓரியண்டேல் பள்ளத்தாக்கை நேரடியாக பார்த்த மனிதர்கள்!
[Sunday 2026-04-05 18:00]

நிலவின் ஓரியண்டேல் பள்ளத்தாக்கை முதன்முறையாக மனிதர்கள் நேரடியாக பார்த்துள்ளனர். நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் 4 பேர் அடங்கிய குழு, ஓரியன் விண்கலம் மூலம் சந்திரப்பகுதியை நோக்கி புறப்பட்டுள்ளனர். 54 ஆண்டுகளுக்கு பின் சந்திரப்பகுதியை நோக்கி மனிதர்கள் புறப்பட்டுள்ள பயணம் இதுவாகும். இந்த குழுவினர் நிலவில் தரையிறங்காமல் நிலவை முழுவதுமாக சுற்றி வர உள்ளனர்.



யுரேனியத்தை செறிவூட்டும் "சென்ட்ரிபியூஜ்" தொழில்நுட்பத்தின் ரகசியங்கள் இதோ!
[Thursday 2026-03-26 07:00]

இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் அணுக்கரு பிளவு ஏற்படக்கூடிய U-235 என்ற ஐசோடோப் வெறும் 0.7% மட்டுமே உள்ளது. ஆனால், அணுமின் நிலையங்களுக்கு 3% முதல் 5% வரையிலும், அணு குண்டுகள் தயாரிக்க 90% வரையிலும் இந்த U-235 தேவைப்படுகிறது. இந்தச் செறிவை அதிகரிப்பதே 'செறிவூட்டல்' ஆகும். இதற்கு 'கேஸ் சென்ட்ரிபியூஜ்' (Gas Centrifuge) முறை பயன்படுத்தப்படுகிறது. முதலில், திட நிலையில் உள்ள யுரேனியம் 'யுரேனியம் ஹெக்ஸாபுளோரைடு' (UF6) என்ற வாயுவாக மாற்றப்படுகிறது. இந்த வாயு, மிக அதிவேகமாகச் சுழலக்கூடிய சென்ட்ரிபியூஜ் உருளைகளுக்குள் செலுத்தப்படுகிறது.



2 தலை, 1 இதயம்: ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
[Tuesday 2026-03-24 17:00]

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் அலிகரில் ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த அரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அலிகர் சாஸ்னி கேட் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவரின் மனைவி நீரு, பிரசவ வலியால் மாவட்ட மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



கடலுக்கு அடியில் வாழும் பேய் மீன்!
[Thursday 2026-02-26 16:00]

கடலில் வாழும் 'ரெட் லிப்ட் பேட்ஃபிஷ் (Red-Lipped Batfish)' எனப்படும் சிவப்பு உதடு கொண்ட மீன் பற்றி பதிவில் பார்க்கலாம். இந்த உலகத்தில் பல அதிஷயங்கள் உள்ளது. அது ஒவ்வொன்றும் நாம் கேட்கும் போது பார்க்கும் போது இப்படியும் இருக்கிறதா என ஆச்சரியமாக இருக்கும். அதிலும் கடல்வாழ் உயிரினங்களை எல்லோருக்கும் ஆராய்ச்சி செய்து பார்ப்பதில் ஒரு விருப்பமும் ஆர்வமும் இருக்கும். கடல் வாழ் உயிரினங்கள் எவ்வளவோ உள்ளது.



கணவனை ரூ. 1.5 கோடிக்கு காதலிக்கே விற்ற மனைவி!
[Tuesday 2026-02-17 16:00]

சில சமயம் சினிமா பாணியில் வாழ்க்கையில்,சில உண்மை சம்பங்கங்கள் நடக்கத்தான் செய்கின்றது. அந்தவயைில்,மனைவி தனது கணவரை பணத்திற்காக அவருடைய காதலிக்கு விற்றுள்ள ஒரு சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினோத சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் தான் நடந்துள்ளது.இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.



எகிப்து கல்வெட்டில் தமிழன் பெயர்!
[Monday 2026-02-16 15:00]

எகிப்து கல்வெட்டில் தமிழன் பெயர் பொறிக்கபட்டுள்ளது. எகிப்தில் பல கல்வெட்டுக்கள் உள்ளதென்பது பலருக்கும் தெரிந்த விடயம். அதில் மன்னர்களின் பழமையான கல்வெட்டு பகுதியில் 2000 ம் ஆண்டு பழமையான தமிழ், பிராமி கல்வெட்டுகளை சுவிசர்லாந்து பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



ரூ.6 லட்சம் காருக்கு ரூ.2 கோடியில் நம்பர் பிளேட்!
[Wednesday 2026-02-04 16:00]

இந்தியாவில், ரூ.6 லட்சம் மதிப்புள்ள காருக்கு ரூ.2 கோடியில் நம்பர் பிளேட் ஒன்று வாங்கப்பட்டுள்ளது. உலகளவில் கார் மட்டுமல்லாது, தனித்துவமான அல்லது விருப்பமான எண் கொண்ட காரின் நம்பர் பிளேட்டையும் வாங்க பெரும் தொகையை சிலர் செலவிடுகின்றனர். இந்தியாவில் கடந்த ஆண்டு, 'HR 88 B 8888' என்ற நம்பர் பிளேட் ரூ.1.17 கோடிக்கு விற்கப்பட்டதே இந்தியாவில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட நம்பர் பிளேட் என்ற பெருமையை பெற்றது.



நிலவில் அமைய உள்ள ஹொட்டல்!
[Thursday 2026-01-15 17:00]

2032 ஆம் ஆண்டிற்குள் நிலவில் ஹொட்டல் ஒன்றை அமைக்கும் முயற்சியில் அமெரிக்கா நிறுவனம் இறங்கியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வரும் உலக நாடுகள் மீண்டும் நிலவிற்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டு வருகின்றன. அமெரிக்காவின் நாசா, 1969 முதல் 1972 வரை நிலவுக்கு 6 முறை மனிதர்களை அனுப்பிய நிலையில், அதன் பின்னர் தற்போது வரை மனிதர்கள் சென்றதில்லை. 2028 ஆம் ஆண்டில் அமெரிக்காவும், 2030 ஆம் ஆண்டில் சீனாவும், 2040 ஆம் ஆண்டில் இந்தியாவும் நிலவிற்கு மனிதர்களை அனுப்புவதை இலக்காக வைத்து செயலாற்றி வருகிறது.



உலகில் மரணமே இல்லாத இடம் எங்குள்ளது தெரியுமா?
[Monday 2026-01-12 19:00]

உலகில் 1950 முதல் யாரும் இறக்காத நகரம் உள்ளதாம் அது எங்குள்ளது என்பதை பார்க்கலாம். உலகில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் யாரும் உயிரிழக்கவில்லை எனப்படுகின்றது. இதற்கான பின்னணி காரணம் அதிர்ச்சி தரும்படியாக இருக்கின்றது. இந்த வித்தியாசமான ஊர் தான் ஸ்வல்பார்டு. இது ஆர்க்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள நார்வே நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இங்குள்ள லாங்யியர்பியன் என்ற நகரத்தில் தான் விசித்திரமான விதிகள் அமுலில் உள்ளன.



பகலில் சாதாரண மனிதன், இரவில் பல்லி முகம் கொண்ட மனிதன்!
[Thursday 2025-12-25 06:00]

இந்தோனேசியாவில் ஆண் ஒருவருக்கு காலையில் ஒரு முகமும், இரவில் ஒரு முகமும் மாறி மாறி தோன்றும் விசித்திர தன்மை உருவாகியுள்ளது. இந்தோனேசியாவில் முராங் என்பவரது குடும்ப கதை மிகவும் ஆச்சரியம் நிறைந்ததாக உள்ளது. அதாவது முராங் குடும்பத்தின் உறுப்பினர்கள் பகலில் ஒரு முகத்துடனும், இரவில் மற்றொரு முகத்துடனும் வாழ்கின்றனர்.



உலகிலேயே ஏலியனுக்காக கட்டப்பட்ட ஒரே ஒரு கோவில்!
[Tuesday 2025-12-16 16:00]

இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்களும், வழிபாட்டுத்தலங்களும் உள்ளதால் இந்தியா ஆன்மீக பூமி என்று அழைக்கப்படுகிறது. இந்து மதத்தில் ஆயிரக்கணக்கான கடவுள்களும், அவர்களுக்கென அதிகமாகக் கோவில்களும் உள்ளன. இதில் சில தனித்துவமான கோவில்கள் உள்ளது, அங்கு வித்தியாசமான பிரசாதங்களும் வழங்கப்படுகிறது. அந்தவகையில், உலகிலேயே ஏலியனுக்காக கட்டப்பட்டுள்ள ஏலியன் கோவில் தமிழ்நாட்டில் மட்டுமே இருப்பதும் பலருக்கும் தெரியாது.



இரவில் நீல நிறத்தில் ஜொலிக்கும் மாயாஜால கடற்கரைகள்!
[Friday 2025-12-12 16:00]

பொதுவாகவே சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரையில் கடலை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எந்தநேரமும் ஓயாத அலைகளின் சத்தம்,அந்த சத்தத்தையும் மீறி கிடைக்கும் மன அமைதி என கடலை பற்றி சொல்லும் அத்தனையும் கூட கவிதையாகிப்போகும் என்றால் மிகையாகாது. இயற்கையின் பிரமாண்டத்தை பறைசாற்றும் கடல் ஏராளமான உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், பல்வேறு மர்மங்களின் இருப்பிடமாகவும் திகழ்கின்றது. இருப்பினும் இதெற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று இரவில் ஒளி வீசும் கடற்கரைகள் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகின்றதா?


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா