Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
விண்வெளியில் மற்றுமொரு பூமியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!
[Tuesday 2022-05-03 16:00]

சனி கிரகத்தின் அருகே இன்னொரு பூமியையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகமும் ஒரு சிறிய சூரிய குடும்பம் போன்றதுதான். சனி கிரகமானது 82 நிலவுகளால் சூழப்பட்டுள்ளது. பூமியை போல சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் மனிதர்கள் வாழும் தன்மை கொண்டதா என்ற விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க சனி கிரகத்தின் அருகே இன்னொரு பூமியையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகமும் ஒரு சிறிய சூரிய குடும்பம் போன்றதுதான். சனி கிரகமானது 82 நிலவுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த 82 நிலவுகளில் டைட்டன் என்பது பூமியை போலவே தோற்றம் அளிக்கிறது.

இந்த டைட்டனை இன்னொரு பூமியாகவே விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கருதுகிறார்கள். ஏனென்றால் இந்த டைட்டனில் ஆறு, குளங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலையும் இந்த டைட்டனில் இருக்கிறது.

பூமியில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்த டைட்டனில் இருப்பதால் இதை பூமி 2.0 என்றும் விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். பருவ நிலைகளால் இயக்கப்படும் உலகளாவிய மணல் சுழற்சியின் காரணமாக உருவான இந்த டைட்டனின் மேற்பரப்பில் உள்ள ஏரிகள் பூமியில் இருப்பதைவிட வெவ்வேறு பொருட்களால் நிரம்பியுள்ளன.

திரவ மீத்தேன் நீரோடை டைட்டனின் பனிக்கட்டி மேற்பரப்பில் படிந்துள்ளன. நைட்ரஜன் காற்று ஹைட்ரோகார்பன் மணல் திட்டுகளை உருவாக்குகிறது. டைட்டனின் தனித்துவமான குன்றுகள், சமவெளிகள் மற்றும் சமதளமான நிலப்பரப்புகளை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை ஸ்டான்போர்டு பல்கலைக்கழக புவியியலாளர் மேத்யூ வபோட்ரே(Matthew Wabotre) தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு இப்போது வெளிப்படுத்தியுள்ளது.

புவி இயற்பியல் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி முடிவுகள் பருவகால சுழற்சி டைட்டனின் மேற்பரப்பில் துகள்களின் இயக்கத்தை எவ்வாறு இயக்குகிறது என்பதை காட்டுகிறது. மேலும் பருவ கால நீரோட்ட சுழற்சியுடன் பூமியின் அம்சங்களை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் நீண்டகாலமாக இந்த மர்மமான உலகத்தை பற்றி பேசி வருகிறார்கள்.

இந்த ஆராய்ச்சி குறித்து புவியியலாளர் மேத்யூ லபோட்ரே(Matthew Wabotre) கூறியதாவது பூமியில் உள்ள குன்றுகள் சிலிக்கேட் பாறைகள் மற்றும் தாதுக்களால் உருவாகின்றன.

அவை காலப்போக்கில் வண்டல் துகள்களால் அரிக்கப்பட்டு, காற்று மற்றும் நீரோடைகள் வழியாக நகர்ந்து வண்டல் அடுக்குகளில் படிந்து இறுதியில் அழுத்தம், நிலத்தடிநீர் மற்றும் சில நேரங்களில் வெப்பத்தின் உதவியுடன் மீண்டும் பாறைகளாக மாறும். டைட்டனில் இதே போன்ற செயல் முறைகள் தான் குன்றுகள், சமவெளிகள் மற்றும் சமதள நிலப்பரப்பை உருவாக்கியது.

ஆனால் பூமி, செவ்வாய், வீனஸ் போல இல்லாமல் டைட்டனில் படிவுகள் திடமானகரிம சேர்மங்களால் ஆனது என்று கருதப்படுகிறது. அதன் அடிப்படை கரிம கூறுகள் எவ்வாறு துகள்களாக மாற முடியும் என்பதை புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் நீண்டகாலமாக முயற்சித்து வருகிறார்கள்.

காற்றுகள் துகள்களை கொண்டு செல்லும் போது துகள்கள் ஒன்றோடொன்று மேற்பரப்புடன் மோதுகின்றன. இந்த மோதல்கள் காலப் போக்கில் துகள்களின் அளவை குறைக்கின்றன. காலப்போக்கில் மணல் துகள்கள் நிலையான அளவில் பராமரிக்கப்படுகின்றன.

கரீபியனில் பகாமாசை சுற்றியுள்ள ஆழமற்ற வெப்ப மண்டல கடல் பகுதியில் பெரும்பாலும் காணப்படும் சிறிய, கோள துகள்களான ஒயிட்ஸ் எனப்படும் பூமியில் உள்ள வண்டல்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் விஞ்ஞானிகள் குழு படிவுகளுக்கான பதிவை கண்டறிந்தது.

கால்சியம் கார்பனேட் நீர்நிலைகளில் இருந்து இழுக்கப்பட்டு குவார்ட்ஸ் போன்ற துகள்களை சுற்றி அடுக்கு களில் சேரும்போது இந்த படிவுகள் உருவாகின்றன. இதன் மூலம் டைட்டனில் உள்ள மணல் திட்டுகளின் முரண்பாட்டை ஆராய்ச்சியாளர்களால் தீர்க்க முடிந்தது. துகள்களை ஒரே துண்டாக இணைத்து சமநிலையை ஏற்படுத்துவதே இதற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் குழு கண்டறிந்தது.

மேலும் டைட்டனின் பூமத்திய ரேகைக்கு அருகில் காற்று இருப்பது தெரிய வந்துள்ளது. டைட்டன் எனப்படும் மாற்று உலகத்தில் உள்ள விஷயங்கள் அனைத்தும் வித்தியாசமானவையாக உள்ளன. ஆனால் அவை பூமியின் தன்மையுடன் காணப்படுகிறது என்பது கவரும் அம்சமாக உள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com



தாய்லாந்தில் 113 மில்லியன் ஆண்டு பழமையான ராட்சத டைனோசர் எச்சங்கள் கண்டுபிடிப்பு!
[Friday 2026-05-15 17:00]

சுமார் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும் பிரம்மாண்டமான தாவர உண்ணி டைனோசர் இனத்தின் எச்சங்கள் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். “நாகடைட்டன் சையஃபுமென்சிஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய டைனோசர் இனம், தென்கிழக்கு ஆசியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.



மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்ட 11,000 காரட் எடையுள்ள பிரம்மாண்ட மாணிக்கக்கல்!
[Monday 2026-05-11 17:00]

மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 11,000 காரட் எடையுள்ள பிரம்மாண்ட மாணிக்கக்கல் ஒன்று துறைசார் நிபுணர்களை வியப்பிலாழ்த்தியுள்ளது. இந்த மாணிக்ககல், பல தசாப்தங்களில் மியான்மரில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க கற்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு, மியான்மரின் புகழ்பெற்ற இரத்தினக்கற்கள் நிறைந்த மோகோக் பகுதியை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.



பிரித்தானியாவின் 250 பேர்கள் மட்டுமே வசிக்கும் தீவு ஒன்றில் ஹன்டாவைரஸ் பாதிப்பு!
[Friday 2026-05-08 16:00]

உலகிலேயே மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட, 250 பேர்களைக் குடியிருப்பாளர்களைக் கொண்ட தீவான 'டிரிஸ்டன் டா குன்ஹா'வில், மூன்றாவது பிரித்தானியருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. இரண்டு பிரித்தானியருக்கு ஹன்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமை வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. தற்போது மூன்றாவது நபருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏப்ரல் 24 அன்று, ஏழு பிரித்தானியர்கள் எம்வி ஹோண்டியஸ் கப்பலில் இருந்து அருகிலுள்ள செயின்ட் ஹெலினா தீவில் இறங்கியுள்ளனர்.



உயிர் பலி வாங்கும் பேய் பங்களா: பொலிசார் கண்டுபிடித்த உண்மை!
[Thursday 2026-04-30 16:00]

அஹமதாபாதிலுள்ள பங்களா ஒன்றில் பேய் நடமாடுவதாகவும், அது உயிர் பலி வாங்குவதாகவும் செய்திகள் பரவத்துவங்கின. அவற்றை மூட நம்பிக்கை என்று விட்டுவிடாமல் பொலிசார் துவக்கிய ரகசிய விசாரணை ஒன்று, 34 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த குற்றச்செயல் ஒன்றை வெளிக்கொணர்ந்துள்ளது. அஹாதாபாதிலுள்ள வீடு ஒன்றில் பேய் உலாவுவதாகவும், அது உயிர் பலிவாங்குவதாகவும் செய்திகள் பரவத்துவங்கியுள்ளன. அந்த வீட்டில் வாழ்ந்துவந்த ஷம்சுதீன் 2015இல் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஷாலியாபீவி பதான் மற்றும் ஜவ்ராவாலா ஆகிய இருவர் உயிரிழந்துள்ளார்கள்.



107-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கனடியர்!
[Wednesday 2026-04-29 17:00]

கனடாவின் மிசிசாகாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 107ம் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். 100 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற்கு நல்ல பழக்கவழக்கங்கள் மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்கள். அதற்குச் சிறந்த உதாரணம், கனடாவின் மிக வயதான மனிதர்களில் ஒருவரான இவான் வின்னிச்சுக் திகழ்கின்றார். செவ்வாய்க்கிழமை அன்று மிசிசாகாவில் உள்ள தனது இல்லத்தில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ இவான் தனது 107-வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார்.



வரலாற்றில் முதல்முறை: நிலவின் ஓரியண்டேல் பள்ளத்தாக்கை நேரடியாக பார்த்த மனிதர்கள்!
[Sunday 2026-04-05 18:00]

நிலவின் ஓரியண்டேல் பள்ளத்தாக்கை முதன்முறையாக மனிதர்கள் நேரடியாக பார்த்துள்ளனர். நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் 4 பேர் அடங்கிய குழு, ஓரியன் விண்கலம் மூலம் சந்திரப்பகுதியை நோக்கி புறப்பட்டுள்ளனர். 54 ஆண்டுகளுக்கு பின் சந்திரப்பகுதியை நோக்கி மனிதர்கள் புறப்பட்டுள்ள பயணம் இதுவாகும். இந்த குழுவினர் நிலவில் தரையிறங்காமல் நிலவை முழுவதுமாக சுற்றி வர உள்ளனர்.



யுரேனியத்தை செறிவூட்டும் "சென்ட்ரிபியூஜ்" தொழில்நுட்பத்தின் ரகசியங்கள் இதோ!
[Thursday 2026-03-26 07:00]

இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் அணுக்கரு பிளவு ஏற்படக்கூடிய U-235 என்ற ஐசோடோப் வெறும் 0.7% மட்டுமே உள்ளது. ஆனால், அணுமின் நிலையங்களுக்கு 3% முதல் 5% வரையிலும், அணு குண்டுகள் தயாரிக்க 90% வரையிலும் இந்த U-235 தேவைப்படுகிறது. இந்தச் செறிவை அதிகரிப்பதே 'செறிவூட்டல்' ஆகும். இதற்கு 'கேஸ் சென்ட்ரிபியூஜ்' (Gas Centrifuge) முறை பயன்படுத்தப்படுகிறது. முதலில், திட நிலையில் உள்ள யுரேனியம் 'யுரேனியம் ஹெக்ஸாபுளோரைடு' (UF6) என்ற வாயுவாக மாற்றப்படுகிறது. இந்த வாயு, மிக அதிவேகமாகச் சுழலக்கூடிய சென்ட்ரிபியூஜ் உருளைகளுக்குள் செலுத்தப்படுகிறது.



2 தலை, 1 இதயம்: ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
[Tuesday 2026-03-24 17:00]

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் அலிகரில் ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த அரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அலிகர் சாஸ்னி கேட் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவரின் மனைவி நீரு, பிரசவ வலியால் மாவட்ட மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



கடலுக்கு அடியில் வாழும் பேய் மீன்!
[Thursday 2026-02-26 16:00]

கடலில் வாழும் 'ரெட் லிப்ட் பேட்ஃபிஷ் (Red-Lipped Batfish)' எனப்படும் சிவப்பு உதடு கொண்ட மீன் பற்றி பதிவில் பார்க்கலாம். இந்த உலகத்தில் பல அதிஷயங்கள் உள்ளது. அது ஒவ்வொன்றும் நாம் கேட்கும் போது பார்க்கும் போது இப்படியும் இருக்கிறதா என ஆச்சரியமாக இருக்கும். அதிலும் கடல்வாழ் உயிரினங்களை எல்லோருக்கும் ஆராய்ச்சி செய்து பார்ப்பதில் ஒரு விருப்பமும் ஆர்வமும் இருக்கும். கடல் வாழ் உயிரினங்கள் எவ்வளவோ உள்ளது.



கணவனை ரூ. 1.5 கோடிக்கு காதலிக்கே விற்ற மனைவி!
[Tuesday 2026-02-17 16:00]

சில சமயம் சினிமா பாணியில் வாழ்க்கையில்,சில உண்மை சம்பங்கங்கள் நடக்கத்தான் செய்கின்றது. அந்தவயைில்,மனைவி தனது கணவரை பணத்திற்காக அவருடைய காதலிக்கு விற்றுள்ள ஒரு சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினோத சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் தான் நடந்துள்ளது.இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.



எகிப்து கல்வெட்டில் தமிழன் பெயர்!
[Monday 2026-02-16 15:00]

எகிப்து கல்வெட்டில் தமிழன் பெயர் பொறிக்கபட்டுள்ளது. எகிப்தில் பல கல்வெட்டுக்கள் உள்ளதென்பது பலருக்கும் தெரிந்த விடயம். அதில் மன்னர்களின் பழமையான கல்வெட்டு பகுதியில் 2000 ம் ஆண்டு பழமையான தமிழ், பிராமி கல்வெட்டுகளை சுவிசர்லாந்து பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



ரூ.6 லட்சம் காருக்கு ரூ.2 கோடியில் நம்பர் பிளேட்!
[Wednesday 2026-02-04 16:00]

இந்தியாவில், ரூ.6 லட்சம் மதிப்புள்ள காருக்கு ரூ.2 கோடியில் நம்பர் பிளேட் ஒன்று வாங்கப்பட்டுள்ளது. உலகளவில் கார் மட்டுமல்லாது, தனித்துவமான அல்லது விருப்பமான எண் கொண்ட காரின் நம்பர் பிளேட்டையும் வாங்க பெரும் தொகையை சிலர் செலவிடுகின்றனர். இந்தியாவில் கடந்த ஆண்டு, 'HR 88 B 8888' என்ற நம்பர் பிளேட் ரூ.1.17 கோடிக்கு விற்கப்பட்டதே இந்தியாவில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட நம்பர் பிளேட் என்ற பெருமையை பெற்றது.



நிலவில் அமைய உள்ள ஹொட்டல்!
[Thursday 2026-01-15 17:00]

2032 ஆம் ஆண்டிற்குள் நிலவில் ஹொட்டல் ஒன்றை அமைக்கும் முயற்சியில் அமெரிக்கா நிறுவனம் இறங்கியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வரும் உலக நாடுகள் மீண்டும் நிலவிற்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டு வருகின்றன. அமெரிக்காவின் நாசா, 1969 முதல் 1972 வரை நிலவுக்கு 6 முறை மனிதர்களை அனுப்பிய நிலையில், அதன் பின்னர் தற்போது வரை மனிதர்கள் சென்றதில்லை. 2028 ஆம் ஆண்டில் அமெரிக்காவும், 2030 ஆம் ஆண்டில் சீனாவும், 2040 ஆம் ஆண்டில் இந்தியாவும் நிலவிற்கு மனிதர்களை அனுப்புவதை இலக்காக வைத்து செயலாற்றி வருகிறது.



உலகில் மரணமே இல்லாத இடம் எங்குள்ளது தெரியுமா?
[Monday 2026-01-12 19:00]

உலகில் 1950 முதல் யாரும் இறக்காத நகரம் உள்ளதாம் அது எங்குள்ளது என்பதை பார்க்கலாம். உலகில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் யாரும் உயிரிழக்கவில்லை எனப்படுகின்றது. இதற்கான பின்னணி காரணம் அதிர்ச்சி தரும்படியாக இருக்கின்றது. இந்த வித்தியாசமான ஊர் தான் ஸ்வல்பார்டு. இது ஆர்க்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள நார்வே நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இங்குள்ள லாங்யியர்பியன் என்ற நகரத்தில் தான் விசித்திரமான விதிகள் அமுலில் உள்ளன.



பகலில் சாதாரண மனிதன், இரவில் பல்லி முகம் கொண்ட மனிதன்!
[Thursday 2025-12-25 06:00]

இந்தோனேசியாவில் ஆண் ஒருவருக்கு காலையில் ஒரு முகமும், இரவில் ஒரு முகமும் மாறி மாறி தோன்றும் விசித்திர தன்மை உருவாகியுள்ளது. இந்தோனேசியாவில் முராங் என்பவரது குடும்ப கதை மிகவும் ஆச்சரியம் நிறைந்ததாக உள்ளது. அதாவது முராங் குடும்பத்தின் உறுப்பினர்கள் பகலில் ஒரு முகத்துடனும், இரவில் மற்றொரு முகத்துடனும் வாழ்கின்றனர்.


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா