Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடாவில் ஊடக மன்றமா? - ஊழல் மன்றமா?? ஊடக மன்றத்துக்குள் ஊழல்? என ஊரே சிரிக்குதாம். Top News Top News
[Friday 2020-03-06 20:00]

கனடாவில் ஊடக மன்றம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களில் அதனுள் நடைபெறும் முறைகேடுகள் குளறுபடிகளை பற்றி அண்மையில் கனடாவிலுள்ள பல சமூக ஊடகவியலாளர்கள் பொதுவெளிக்கு பல விடயங்களை தமது அதிருப்திகளாக வெளிப்படுத்தியுள்ளனர். நாம் ஒரு பொதுவான சமூக ஊடகம் என்றவகையிலும் கனடாவில் உள்ள தமிழர்களோடு கடந்த 13 வருடங்களாக இனைய ஊடகமாக செயல்பட்டு வருவதனாலும் பல ஊடகங்கள் கேட்டுக் கொண்டமைக்கு அமையவும் கீழ்வரும் செய்திகளை மக்களோடு பகிர்வதற்கு கருத்து சுதந்திர அடிப்படியில் உடன்பாட்டுள்ளோம்.

கனேடிய தமிழர்கள் மத்தியில் உள்ள சில ஊடக போலிகளது முகத்திரைகளை பலர் கீழ் கண்டவாறு விமர்சனம் செய்துள்ளனர். சமூகத்தின் பேராலான சுரண்டல்கள் கண்டிக்கத்தக்கவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை - அந்த வகையில் நிதானமாக கீழே படியுங்கள்..

(01)

ஊடக மன்றமா - ஊழல் மன்றமா?? ஊருக்கு ஒரு சட்டமா.. ஊடக மன்றத்துக்கு ஒரு சட்டமா?? என்று ஊரே சிரிக்குது..

கூரை ஏறி தூங்கிற கோழி பிடிக்க தெரியாத நீங்கள்.. வைகுண்டமேறி ஐ நா வில் நீதி விசாரணை தேடப்போகிறீர்களாம்..

உங்களிடம் தொடரும் கேள்விகள் இதோ ஊடக நண்பர்களே..

நீங்கள் ஊடக மன்றம் ஆரம்பித்தது.. சமூகத்தை வளப்படுத்தவா அல்லது - உங்களில் சிலரை வளப்படுத்தவா ? அல்லது ஊரை அச்சுறுத்தி உலக புகழ் தேடவா?

உங்களால் ஊடக மன்றம் என்று இணைத்துக் கொள்ளப்பட்ட அல்லது உங்களது குழுமத்தில் இருக்கிறார்களென உலகுக்கு பொய்யாக வெளிக்காட்டப்பட்ட 19 ஊடகங்களில் எத்தனைபேர் உங்கள்மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள்? சக ஊடகங்களே உங்களை நம்பாதபோது பொதுமக்கள் எவ்வளவுக்கு உங்களை நம்புவார்கள்?

களவு பிடித்தவர்களே கள்வரான கதை - சுயநலம் மிக்க நிர்வாக சீர்கேடுதானே.

காவார்டு தமிழ் இருக்கையுள் களவு என்றீர்கள். மாட்டு பண்ணை நிதி களவு என்றீர்கள் பரதமையில் நிகழ்வினுள் களவு என்றீர்கள் வீட்டு அடமானக் கடன்காரருள் களவு என்றீர்கள். அழகுராணி போட்டிகளுக்குள் நுழைந்து கன்னிப் பரிசோதனை செய்தீர்கள்..

அதுக்கும் மேலாக தனியாரால் செய்யப்படும் பொது நிகழ்வுகளில் யாரவது தாயக மக்களுக்கும் உதவப்போகிறோம் என்று கூறி நிகழ்வுகள் செய்தால் கணக்கு காட்டவேண்டும் என்றீர்கள்..

மக்கள் பெயரால் மன்றத்தின் பெயரால் நீங்கள் செய்த தமிழர் நாள்2019 நிகழ்வு களவு இல்லையா சுத்து மாத்து இல்லையா??

அதன் கணக்கு வழக்கை யார் வந்து கேட்கப் போகிறார்கள்?

சரி எம்மில் பலர் 2018ல் உங்கள் கருத்துக்களுக்கு உடன்பட்டோம் நமது சமூகம் முன்னேறப்போகிறது எனவும் இந்த ஊடக மன்றத்தால் தாயக மக்களுக்கும் ஏதாவது நன்மை செய்யலாம் எனவும் பலர் பகல் கனவுகள் கண்டோம் நன்மைகள் நடக்கும் என எண்ணியிருந்தோம்.

சரி இப்படியே கனேடிய தமிழர்களுக்குள் களவு பிடிக்கிற ஊடக போலீசுக்காரர் மாதிரி இருந்த உங்களுக்குள் ... நீங்கள் (நாங்கள்) செய்த முதலாவது ஊடக மன்ற விருந்துபசார நிகள்வின் வரவு செலவு கணக்கு விடயத்தில் தில்லுமுல்லுப்பட்டு ஆசை அறுபது மோகம் முப்பது போல கூட்டம் கலைந்து போனீர்கள்.

இதனிடையே... ஒருகட்டத்தில் ஐ பி சி தமிழின் கனடா நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தீர்கள். அதில் ஊடகங்கள் பலர் உடன்படமறுத்தனர். ஐ பி சி தமிழின் கனடா நிகழ்வு நடைபெற்ற அன்று அதற்க்கு போட்டியாக அதே தினத்தில் தமிழர்நாள் 2019 என ஊடக மன்றத்தின் பெயரால் நிகழ்வு செய்தீர்கள்.

இது விடயமாக போட்டி நிகழ்வு வேண்டாம் வேறு திகதியில் தமிழர் நாள் நிகழ்வை வைப்போம் என்றபோது விடாப் பிடியாக போட்டி நிகழ்வு செய்தீர்கள் நிகழ்வு வெற்றி என துள்ளிக் குதித்தீர்கள்.

தமிழ் மக்களது பெயரால் தமிழ் ஊடகங்களது பெயரால் தமிழர் நாள் 2019 என்ற நிகழ்வை செய்ய உங்களுக்கு எத்தனை ஊடகங்கள் ( மேலே படத்திலுள்ள லோகோக்கள்) அனுமதி தந்தார்கள்.?

அதுக்குள்ளும் இதுக்குள்ளும் நுழைந்து பொது அமைப்புகளிடமும் தனியார் நிகழ்வுகளிடமும் களவு பிடித்த உங்களிடம் இன்று உங்களால் குற்றம் சாட்டப்பட்ட அதே நபர்களும் பொதுமக்களும் "தமிழர் நாள் 2019" நிகழ்வின் வரவு செலவு என்ன என்றும் இலாபத்தில் பங்குகள் யார் யாருக்கு போனது என்றும் பொது மக்களே கேட்க்கிறார்கள்.

நாலா புறமும் சந்தியே சிரிக்கிறது. ஊடக இல்லமா அல்லது ஊழல் இல்லமா என்று.. உங்களில் ஒருவனாக நின்று அன்றே மெல்ல மெல்ல சொன்னேன் இந்த அமைப்பை பதிவு செய்யுங்கள் கணக்கு வழக்குகளில் வெளிப்படைத்தன்மை பேணுங்கள் என்று..

ஊடக அமைப்பின் எதிர்கால நலன் கருதி ஒன்றாக இருந்து உண்ட அந்த காலைப் பொழுதுகளில் ஏதோ சில கேள்விகளை கேட்டேன் என்பதற்காக நாளடைவில் வாட்ஸப் இல் இருந்து குமார் தில்லைநாதன் என்னை அகற்றினீர்கள் - அதன்பின்னர் ஈமெயில் குழுமத்தில் இருந்தும் அகற்றினீர்கள்.

இதுதான் ஊடக இல்லத்தின் சர்வாதிகாரமா? நீதியா நியாயமா?

இந்த பெயரளவிலான நேர்மையற்ற ஊடக அமைப்பின் வளர்ச்சி நன்மைகளுக்காக எம்மில் பலர் அன்று சொன்ன கருத்துக்களை நீங்கள் அசட்டை , உதாசீனம் செய்ததோடு மட்டுமன்றி - அன்று உங்கள் மூவரோடும் சேந்து நின்ற அத்தனை ஊடக உறவுகளையும் இன்று மக்கள் மத்தியில் தமிழர்நாள் 2019 நிகழ்வுமூலம் கள்வர்களாக்கியுள்ளீர்கள்.

பல நாட்கள் ஒன்றாக கூடியிருந்து காலை உணவு உண்டு உங்களளோடு ஊர்நடப்பு (2018) பேசிய நான் ஒரு ஐந்து நிமிடம் இருந்து பேசுவோம் என அழைத்தபோது. செந்தூரன் ஓம் என்றார். குமார் ஓடி விட்டார் இப்படியே ஒவ்வொரு ஊடக நண்பர்களது தொடர்புகளையும் நடப்புக்களையும் உதாசீனம் செய்துவரும் உங்களது அழைப்பை ஏற்று இன்று எத்தனைபேர் உங்களது கூட்டத்துக்கு வந்தார்கள். ?? எத்தனை பேருக்கு இது தொடர்பில் அழைப்பு விடுத்தீர்கள்?? வந்தவர்களே சாட்சி.

குறை நிறைகளை கயேந்திரனோடு கதைத்தால் மழுப்பலாக சொல்லுவார் - அது நீங்கள் செந்தூரனோடும் குமாரோடும்தான் கதையுங்கள் என்று..

அண்மையில் இருவரையும் திரை அரங்கில் கண்டபோது பொய்யாவிளக்கு படம் முடிந்ததும் 5 நிமிடங்கள் ஒருவிடயம் பேசவேண்டும் தேநீர் சாலை போவோமா என்றபோது. நக்கலாக கை எடுத்து என்னை கும்பிட்ட குமார் ஐயோ அன்னாச்சி ஆழ விடுங்க சாமி என்று ஓடிவிட்டார்.

அன்று இவர்களிடம் நான் கேட்க இருந்த விடயம் உங்களது ஐ நா சபை பற்றிய கூட்டத்துக்கு எத்தனை ஊடகங்கள் வருகிறார்கள் எனவும் எனக்கு ஏன் அழைப்பு வரவில்லை எனவும் கேட்பதற்காகவே,.

அதெல்லாம் கடந்து நேற்றய 20-02-2020 தினம் ஐ நா தொடர்பிலான உங்களது கண்துடைப்பு கூட்ட நாடகத்துக்கு செய்தி இணையத்துக்கோ புதினம் மீடியாவுக்கோ எந்த வித அழைப்பும் வரவில்லை.. சரி உள்குத்தாக இருக்கலாம்.. உங்கள் இருவரதும் ஊடக ஐக்கிய தன்மையின் ஊழல் தர்மமாகவும் இருக்கலாம்.

19 ஊடக லோகோக்களை ஒன்றாக போட்டு ஊடக இல்லம் என உலகுக்கு பெரு வெளிச்சம் போட்ட உங்களது ஊடக இல்லம் என்பது ஒரு சுத்துமாத்து பொய் வீக்கம் கானல் நீர் என்பது மக்களுக்கு தற்போது புரிந்திருக்கும். 19 ஊடக லோகோக்களை போட்டு மீடியா டின்னர் நைட் நடாத்திய நீங்கள் ஊடகங்கள் 19 பேரில் எத்தனை பேரை உங்களது கூட்டத்துக்கு வரவழைத்தீர்கள்?

பலர் கேட்பது போல சொல்வது போல நானும் ஒரு ஊடகனாக இன்று உங்களுக்கு வெளியே இருந்து சொல்வது யாதெனில் - தமிழ் ஊடக மன்றம் என்று ஒன்று இனிமேலும் இயங்கினால் அது வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். 5 அல்லது 7 பேர் கொண்ட குழு ஒன்றினால் பொதுவாக பதிவு செய்யப்படல் வேண்டும் அதனுள் கருத்து சுதந்திரம் இருத்தல்வேண்டும். அதன் பெயரை சொல்லி செய்யப்படும் தமிழர் நாள் நிகழ்வும் தனிமனிதர்களுக்கு சொந்தமானது அல்ல - அதன் வரவு செலவும் பொதுவெளிக்கு வரவேண்டிய ஒன்றே..

தயவு செய்து உங்களது தனிப்பட்ட புகழ் தேடும் படலங்களுக்காகவும் புழைப்புகளுக்காகவும் உருப்படி இல்லாத ஊடக மன்றம் என்று ஒரு பெயரை கூறி நாடு - விடுதலை - மக்கள் - ஐக்கிய நாடுகளது கூட்டம் - கனேடிய தமிழ் அமைப்புகளிடம் கேள்விகள் - அவர்களுக்கு ஆலோசனை அது இது என இனிமேலும் மக்களை முட்டாள்கள் ஆக்காதீர்கள்.

தொடரும்... (இவ்வாறு சமூக ஊடகர் மகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்)

(02) ஊடக மன்றமா? பறை உண்மையைக் கக்குகிறது:

ஊடகமன்றம் 2018 கோடை கால கூடலோடு தொடங்கப்பெற்றது.அப்போது கிட்டத்தட்ட 15 க்கு மேற்பட்ட ஊடகங்கள் கோடை ஒன்றில் இணைந்தார்கள். அந்த ஊடக மன்றத்தில் 100கனடாவெள்ளியை செலுத்தி உறுப்பினராக பறை ஊடகம் இணைந்து கொண்டது. ஊடக மன்றத்தில் இணையுமா று தேடிப்பார் குமார் பறை ஊடகத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அழைப்பு விடும்பொழுது கணக்கு வழக்கு திறந்த மனதோடு வெளியிடப்படும் என்ற உறுதிமொழியை தேடிப்பார் வழங்கியிருந்தார்.

இன்றுவரை உறுப்பினருக்கான பற்றுச்சீட்டோ அல்லது 100 கனடாவெள்ளி வழங்கியமைக்கான பற்றுச்சீடடோ பறை ஊடகத்திற்கு தேடிப்பார் குமார் வழங்கவில்லை. தொடர்ந்து ஊடக உறுப்பினரோடு கலந்தலோசிக்காமல் டிசம்பர் 2018 ல் இரவுவிருந்துக்கான திட்டம் தீட்டப்பட்டது. திட்டத்தின் அடிப்படையில் சிங்களவர்களின் மண்டபத்தில் இரவு விருந்து ஒழுங்கமைத்திருந்தார்கள்.

அதை அறிந்த பறை ஊடகம் இடத்தை மாற்றும் படி கேட்டபோது பார்ப்போம் என் று சொல்லப்பட்டது. தொடர்ந்து ஊடக விருந்து சிங்களவரின் மண்டபத்தில் டிசம்பர் 2018 இல் நடைபெற்றது.பறை ஊடகம் பார்வையாளராக மட்டும் பங்கேற்றது. பறை ஊடகம் முழு நிகழ்வையும் காணொளியாகவும் நிழற்படமாகவும் பதிவு செய்தது.ஆனால் பறை ஊடகத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

கடந்த ஆண்டு கோடையில் தமிழர் நாள் 2019 நிகழ்வும் தன்னிச்சையாக ஒருவரால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது.அதில் பலர் பங்காளராக விரும்பியபோதும் உள்வாங்கப்படவில்லை.அந்த நேரத்தில் மீண்டும் தேடிப்பார் குமார் நிகழ்ச்சிக்கு 10000 கனடாவெள்ளியை தருமாறு பறை ஊடகத்திடம் கேட்டிருந்தார்.அதற்கு பறை ஊடகம் கொடுக்க மறுத்தது.100 கனடாவுக்கு கணக்கு காட்டாதவர் 10000 கனடாவெள்ளிக்கு கைவிரித்தால்???????

காரணம்

1.பறை ஊடகம் 100 கனடாவெள்ளி கொடுத்து உறுப்பினரானதிற்கு தேடிப்பார் குமார் ஒழுக்கநெறி தவறி பற்றுச்சீட்டை வழங்காமை.

2.சிங்களவனின் மண்டபத்தில் விருந்து வைக்கவேண்டாம் இடத்தை மாற்றும்படி கேட்டும் மாற்றாமல் 400 ஆண்டாக தமிழர்களை அழித்த சிங்களவனுக்கு உழைப்பைக் கொடுத்தமை.

3.தமிழர் நாளும் தன்னிச்சையான தனிப்பபட்டவரின் வணிக நோக்கம் நிறைந்திருந்தது.

4. தமிழர் நாளில் பங்காளராக கேட்டபோது யாரையும் இணைத்துக்கொள்ளவில்லை.

அத்தோடு மீண்டும் பல முன்னெடுப்புகள் உறுப்பினர்கள் அனுமதியின்றி தனிப்பட்ட தனது வணிகத்தை விளம்பரப்படுத்துவதற்கு பயன்படுத்துவதை பறை ஊடகம் வன்மையாக கண்டிக்கிறது.

ஊடக மன்றம் இன்றுவரை கனடாச் சட்ட ஒழுங்கு அமைய பதியப்படாத அமைப்பு.

ஊடக அமைப்பைக் கையகப்படுத்தியவர் இணைந்த உறுப்பினர்களை தொடர்ந்தும் அவமதிப்பது வழமையோடு தொடர்கிறது.

உறு.ப்பினராக இருந்தவர்கள் கேள்வி கேட்டால் இணைய தொடர்புகளைத் துண்டித்தல்.

உறுப்பினர்களால் தலைவர் பதவி தெரிவு செய்யப்படாமல் வெற்றிடமாக இருக்கிறது.

உறுப்பினர்களால் பொருளாளர் பதவி தெரிவு செய்யப்படாமல் வெற்றிடமாக இருக்கிறது.

உறுப்பினர்களால் செயலாளர் பதவி தெரிவு செய்யப்படாமல் வெற்றிடமாக இருக்கிறது.

இவ்வளவு நாளும் இந்த ஊடகஅமைப்பைச் சாட்டி திரட்டப்பட்ட பணத்தின் கணக்கு யாருடைய பறிக்குள் துள்ளிவிளையாடுகிறது. இப்பணம் கனடா வருமானவரித்துறைக்கு காட்டப்படாத கறுப்புப்பணம்.

ஊடக அமைப்பின் யாப்பு மக்கள் பார்வைக்கு இருக்கிறதா? ஊடகமன்றத்தின் யாப்பு எங்கே?

ஊடக உறுப்பினர்களின் ஆண்டுக்கூட்டம் நடந்ததா? ஆண்டுக் கூட்டறிக்கை உண்டா?

ஆண்டுக்கூட்டறிக்கை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? ஆண்டுக்கணக்கறிக்கை எங்கே?

ஆண்டுக்கணக்கறிக்கை உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா?

ரோரரண்டோ வாழ் தமிழர்களை ஏமாளிகளாக்குவதே சிலருடைய உயர்ந்த பணியாக இருக்கிறது. இந்தப்பணியை மேம்படுத்த ஆள் வைத்து பொன்னாடை போர்ப்பது.

வணிகர்களே நிகழ்வுகளுக்கு ஆதரவு வழங்க முற்படும்போது நிகழ்வுகளின் அமைப்புக்களின் உண்மைத்தன்மை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். மக்களை ஏமாற்றுவதற்கு உடந்தையாக இருந்தால் உடந்தையாக இருப்பவர்கள்தான் முதற் குற்றவாளிகள்.

தமிழர்களே வணிகர்களே நிகழ்ச்சி செய்யும் பலர் திருடர்களாகவும் நண்பர்களாகவும் இருக்கிறார்கள்.

மக்கள் வணிகர்கள் தெளிவுபெறுவதற்கான செய்தி.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

(இவ்வாறு சமூக ஊடகர் மு க - ஜோகநாதன் இவர்கள் தன்னிடம் 10 000 டொலர்கள் கேட்டதாக விமர்சனம் செய்துள்ளார்)

இவ்வாறு கனடாவில் தமிழ் ஊடக மன்றம் என்ற போலி அமைப்பு பல பொதுவெளி விமர்சனங்களை எதிர்கொண்டு தவிக்கிறது.

இணைப்பு - http://paraii.com/6433 ஊடக மன்றமா? பறை உண்மையைக் கக்குகிறது:

(03)

வலிய கூப்பிட்டு பொல்லுக்கொடுத்து அடிவாங்கிய குமாரும் கஜேந்திரனும்..(அணுகுமுறை பிழைகளாலும்,சீர் கேடுகளாலும், திட்டமிடல் அறிவின்மையாலும் வெறும் 12 பேரோடும் 2 ஊடகங்களோடும் இவர்கள் நடாத்திய பம்மாத்து ஐ நா சபை பற்றிய கூட்டத்தில்.. கேள்விகளால் இவர்களை கிழித்து தொங்கவிட்ட சக ஊடகவியலாளர்கள் Video.)

(இவ்வாறு சமூக ஊடகர் ETTV காணொளி பதிவாளர் திரு-ராஜ் ராஜேஷ் அவர்கள் ஊடக மன்ற காமடியர்களது குறிக்கோள் பற்றியும் இலக்குகள் பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளார்.)

  
  
   Bookmark and Share Seithy.com



தாய்லாந்தில் 113 மில்லியன் ஆண்டு பழமையான ராட்சத டைனோசர் எச்சங்கள் கண்டுபிடிப்பு!
[Friday 2026-05-15 17:00]

சுமார் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும் பிரம்மாண்டமான தாவர உண்ணி டைனோசர் இனத்தின் எச்சங்கள் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். “நாகடைட்டன் சையஃபுமென்சிஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய டைனோசர் இனம், தென்கிழக்கு ஆசியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.



மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்ட 11,000 காரட் எடையுள்ள பிரம்மாண்ட மாணிக்கக்கல்!
[Monday 2026-05-11 17:00]

மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 11,000 காரட் எடையுள்ள பிரம்மாண்ட மாணிக்கக்கல் ஒன்று துறைசார் நிபுணர்களை வியப்பிலாழ்த்தியுள்ளது. இந்த மாணிக்ககல், பல தசாப்தங்களில் மியான்மரில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க கற்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு, மியான்மரின் புகழ்பெற்ற இரத்தினக்கற்கள் நிறைந்த மோகோக் பகுதியை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.



பிரித்தானியாவின் 250 பேர்கள் மட்டுமே வசிக்கும் தீவு ஒன்றில் ஹன்டாவைரஸ் பாதிப்பு!
[Friday 2026-05-08 16:00]

உலகிலேயே மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட, 250 பேர்களைக் குடியிருப்பாளர்களைக் கொண்ட தீவான 'டிரிஸ்டன் டா குன்ஹா'வில், மூன்றாவது பிரித்தானியருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. இரண்டு பிரித்தானியருக்கு ஹன்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமை வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. தற்போது மூன்றாவது நபருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏப்ரல் 24 அன்று, ஏழு பிரித்தானியர்கள் எம்வி ஹோண்டியஸ் கப்பலில் இருந்து அருகிலுள்ள செயின்ட் ஹெலினா தீவில் இறங்கியுள்ளனர்.



உயிர் பலி வாங்கும் பேய் பங்களா: பொலிசார் கண்டுபிடித்த உண்மை!
[Thursday 2026-04-30 16:00]

அஹமதாபாதிலுள்ள பங்களா ஒன்றில் பேய் நடமாடுவதாகவும், அது உயிர் பலி வாங்குவதாகவும் செய்திகள் பரவத்துவங்கின. அவற்றை மூட நம்பிக்கை என்று விட்டுவிடாமல் பொலிசார் துவக்கிய ரகசிய விசாரணை ஒன்று, 34 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த குற்றச்செயல் ஒன்றை வெளிக்கொணர்ந்துள்ளது. அஹாதாபாதிலுள்ள வீடு ஒன்றில் பேய் உலாவுவதாகவும், அது உயிர் பலிவாங்குவதாகவும் செய்திகள் பரவத்துவங்கியுள்ளன. அந்த வீட்டில் வாழ்ந்துவந்த ஷம்சுதீன் 2015இல் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஷாலியாபீவி பதான் மற்றும் ஜவ்ராவாலா ஆகிய இருவர் உயிரிழந்துள்ளார்கள்.



107-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கனடியர்!
[Wednesday 2026-04-29 17:00]

கனடாவின் மிசிசாகாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 107ம் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். 100 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற்கு நல்ல பழக்கவழக்கங்கள் மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்கள். அதற்குச் சிறந்த உதாரணம், கனடாவின் மிக வயதான மனிதர்களில் ஒருவரான இவான் வின்னிச்சுக் திகழ்கின்றார். செவ்வாய்க்கிழமை அன்று மிசிசாகாவில் உள்ள தனது இல்லத்தில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ இவான் தனது 107-வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார்.



வரலாற்றில் முதல்முறை: நிலவின் ஓரியண்டேல் பள்ளத்தாக்கை நேரடியாக பார்த்த மனிதர்கள்!
[Sunday 2026-04-05 18:00]

நிலவின் ஓரியண்டேல் பள்ளத்தாக்கை முதன்முறையாக மனிதர்கள் நேரடியாக பார்த்துள்ளனர். நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் 4 பேர் அடங்கிய குழு, ஓரியன் விண்கலம் மூலம் சந்திரப்பகுதியை நோக்கி புறப்பட்டுள்ளனர். 54 ஆண்டுகளுக்கு பின் சந்திரப்பகுதியை நோக்கி மனிதர்கள் புறப்பட்டுள்ள பயணம் இதுவாகும். இந்த குழுவினர் நிலவில் தரையிறங்காமல் நிலவை முழுவதுமாக சுற்றி வர உள்ளனர்.



யுரேனியத்தை செறிவூட்டும் "சென்ட்ரிபியூஜ்" தொழில்நுட்பத்தின் ரகசியங்கள் இதோ!
[Thursday 2026-03-26 07:00]

இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் அணுக்கரு பிளவு ஏற்படக்கூடிய U-235 என்ற ஐசோடோப் வெறும் 0.7% மட்டுமே உள்ளது. ஆனால், அணுமின் நிலையங்களுக்கு 3% முதல் 5% வரையிலும், அணு குண்டுகள் தயாரிக்க 90% வரையிலும் இந்த U-235 தேவைப்படுகிறது. இந்தச் செறிவை அதிகரிப்பதே 'செறிவூட்டல்' ஆகும். இதற்கு 'கேஸ் சென்ட்ரிபியூஜ்' (Gas Centrifuge) முறை பயன்படுத்தப்படுகிறது. முதலில், திட நிலையில் உள்ள யுரேனியம் 'யுரேனியம் ஹெக்ஸாபுளோரைடு' (UF6) என்ற வாயுவாக மாற்றப்படுகிறது. இந்த வாயு, மிக அதிவேகமாகச் சுழலக்கூடிய சென்ட்ரிபியூஜ் உருளைகளுக்குள் செலுத்தப்படுகிறது.



2 தலை, 1 இதயம்: ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
[Tuesday 2026-03-24 17:00]

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் அலிகரில் ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த அரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அலிகர் சாஸ்னி கேட் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவரின் மனைவி நீரு, பிரசவ வலியால் மாவட்ட மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



கடலுக்கு அடியில் வாழும் பேய் மீன்!
[Thursday 2026-02-26 16:00]

கடலில் வாழும் 'ரெட் லிப்ட் பேட்ஃபிஷ் (Red-Lipped Batfish)' எனப்படும் சிவப்பு உதடு கொண்ட மீன் பற்றி பதிவில் பார்க்கலாம். இந்த உலகத்தில் பல அதிஷயங்கள் உள்ளது. அது ஒவ்வொன்றும் நாம் கேட்கும் போது பார்க்கும் போது இப்படியும் இருக்கிறதா என ஆச்சரியமாக இருக்கும். அதிலும் கடல்வாழ் உயிரினங்களை எல்லோருக்கும் ஆராய்ச்சி செய்து பார்ப்பதில் ஒரு விருப்பமும் ஆர்வமும் இருக்கும். கடல் வாழ் உயிரினங்கள் எவ்வளவோ உள்ளது.



கணவனை ரூ. 1.5 கோடிக்கு காதலிக்கே விற்ற மனைவி!
[Tuesday 2026-02-17 16:00]

சில சமயம் சினிமா பாணியில் வாழ்க்கையில்,சில உண்மை சம்பங்கங்கள் நடக்கத்தான் செய்கின்றது. அந்தவயைில்,மனைவி தனது கணவரை பணத்திற்காக அவருடைய காதலிக்கு விற்றுள்ள ஒரு சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினோத சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் தான் நடந்துள்ளது.இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.



எகிப்து கல்வெட்டில் தமிழன் பெயர்!
[Monday 2026-02-16 15:00]

எகிப்து கல்வெட்டில் தமிழன் பெயர் பொறிக்கபட்டுள்ளது. எகிப்தில் பல கல்வெட்டுக்கள் உள்ளதென்பது பலருக்கும் தெரிந்த விடயம். அதில் மன்னர்களின் பழமையான கல்வெட்டு பகுதியில் 2000 ம் ஆண்டு பழமையான தமிழ், பிராமி கல்வெட்டுகளை சுவிசர்லாந்து பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



ரூ.6 லட்சம் காருக்கு ரூ.2 கோடியில் நம்பர் பிளேட்!
[Wednesday 2026-02-04 16:00]

இந்தியாவில், ரூ.6 லட்சம் மதிப்புள்ள காருக்கு ரூ.2 கோடியில் நம்பர் பிளேட் ஒன்று வாங்கப்பட்டுள்ளது. உலகளவில் கார் மட்டுமல்லாது, தனித்துவமான அல்லது விருப்பமான எண் கொண்ட காரின் நம்பர் பிளேட்டையும் வாங்க பெரும் தொகையை சிலர் செலவிடுகின்றனர். இந்தியாவில் கடந்த ஆண்டு, 'HR 88 B 8888' என்ற நம்பர் பிளேட் ரூ.1.17 கோடிக்கு விற்கப்பட்டதே இந்தியாவில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட நம்பர் பிளேட் என்ற பெருமையை பெற்றது.



நிலவில் அமைய உள்ள ஹொட்டல்!
[Thursday 2026-01-15 17:00]

2032 ஆம் ஆண்டிற்குள் நிலவில் ஹொட்டல் ஒன்றை அமைக்கும் முயற்சியில் அமெரிக்கா நிறுவனம் இறங்கியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வரும் உலக நாடுகள் மீண்டும் நிலவிற்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டு வருகின்றன. அமெரிக்காவின் நாசா, 1969 முதல் 1972 வரை நிலவுக்கு 6 முறை மனிதர்களை அனுப்பிய நிலையில், அதன் பின்னர் தற்போது வரை மனிதர்கள் சென்றதில்லை. 2028 ஆம் ஆண்டில் அமெரிக்காவும், 2030 ஆம் ஆண்டில் சீனாவும், 2040 ஆம் ஆண்டில் இந்தியாவும் நிலவிற்கு மனிதர்களை அனுப்புவதை இலக்காக வைத்து செயலாற்றி வருகிறது.



உலகில் மரணமே இல்லாத இடம் எங்குள்ளது தெரியுமா?
[Monday 2026-01-12 19:00]

உலகில் 1950 முதல் யாரும் இறக்காத நகரம் உள்ளதாம் அது எங்குள்ளது என்பதை பார்க்கலாம். உலகில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் யாரும் உயிரிழக்கவில்லை எனப்படுகின்றது. இதற்கான பின்னணி காரணம் அதிர்ச்சி தரும்படியாக இருக்கின்றது. இந்த வித்தியாசமான ஊர் தான் ஸ்வல்பார்டு. இது ஆர்க்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள நார்வே நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இங்குள்ள லாங்யியர்பியன் என்ற நகரத்தில் தான் விசித்திரமான விதிகள் அமுலில் உள்ளன.



பகலில் சாதாரண மனிதன், இரவில் பல்லி முகம் கொண்ட மனிதன்!
[Thursday 2025-12-25 06:00]

இந்தோனேசியாவில் ஆண் ஒருவருக்கு காலையில் ஒரு முகமும், இரவில் ஒரு முகமும் மாறி மாறி தோன்றும் விசித்திர தன்மை உருவாகியுள்ளது. இந்தோனேசியாவில் முராங் என்பவரது குடும்ப கதை மிகவும் ஆச்சரியம் நிறைந்ததாக உள்ளது. அதாவது முராங் குடும்பத்தின் உறுப்பினர்கள் பகலில் ஒரு முகத்துடனும், இரவில் மற்றொரு முகத்துடனும் வாழ்கின்றனர்.


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா