Untitled Document
November 28, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ரீ-ரிலீஸாகும் அண்ணாமலை, முரட்டுக்காளை படங்கள்!
[Friday 2026-11-27 16:00]

ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களான அண்ணாமலை மற்றும் முரட்டுக்காளை வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகின்றன. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் ரூ. 840 கோடிக்கும் மேல் வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளது.

இதை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் திரைப்படத்தில் ரஜினி நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தவிர ரஜினிகாந்த் - கமல் இணைந்து நடிக்கும் படத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

வருடா வருடம் டிசம்பர் 12-ஆம் தேதி என்றால் கண்டிப்பாக ரஜினியின் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், படக்குழுவினரிடம் இருந்து படத்தின் டீசர் அல்லது போஸ்டர்கள் வெளியாகும். அதே போல், ரஜினிகாந்த் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாமலை மற்றும் முரட்டுக்காளை ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, 4K தரத்தில் காட்சிகள் மேம்படுத்தப்பட்டு, டால்பி அட்மாஸ் ஒலி தொழில்நுட்பத்துடன் இப்படங்கள் ரீ-ரிலீஸாகிறது. இதனால் ரஜினி ரசிகர்களுக்கு கண்டிப்பாக டிசம்பர் 12-ஆம் தேதி கொண்டாட்டமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா