Untitled Document
November 28, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
விஜய்யின் ஆறு மாத ஆட்சி: விஜய் சேதுபதி சொன்ன விமர்சனம்!
[Friday 2026-11-27 07:00]

முதல்வராக விஜய் பதவியேற்று ஆறு மாதம் ஆகும் நிலையில், அது பற்றி விஜய் சேதுபதி பேசியது வைரல் ஆகி இருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசும்போது முதல்வர் விஜய்யை விமர்சித்ததாக சர்ச்சை வெடித்தது. அதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கடுமையாக விஜய் சேதுபதியை சமூக வலைத்தளங்களில் தாக்கி பதிவிட்டு வந்தனர். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் Train என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. அதன் ப்ரோமோஷனுக்காக அவர் கொடுத்த பேட்டியில் அரசியல் பற்றி சொன்ன கருத்துக்கள் வைரல் ஆகி இருக்கிறது.

முதல்வராக விஜய் பதவியேற்று ஆறு மாதம் ஆவது பற்றி தொகுப்பாளர் கேள்வி கேட்க, விஜய் சேதுபதி சொன்ன பதில் இதுதான்.

"விஜய் சாரை நடிகராக தான் எனக்கு தெரியும். அரசியலை நான் தீவிரமாக பார்ப்பதில்லை. அது என் வேலை இல்லை. நமக்கு வேற வேலை இருக்கு."

"எனக்கு அரசியல் கருத்து பேச எந்த விதமான ஆட்சேபமும் இல்லை, ஆனால் அதை நாகரீகமாக ஏற்றுக்கொள்ளும் தன்மை இங்கே இல்லை. அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி" என விஜய் சேதுபதி பேசி இருக்கிறார்.

விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை இல்லை என விஜய் மற்றும் அவரது கட்சியை விஜய் சேதுபதி விமர்சித்து இருப்பது வைரல் ஆகி இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா