Untitled Document
November 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
16 நாட்களில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Sunday 2026-11-22 18:00]

சூர்யாவின் சீன் திரைப்படத்தின் வசூல் விவரங்களை நாம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்போது 16 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநரான ஜீது மாதவன் தமிழில் அறிமுகமாகியுள்ள திரைப்படம் சீன். அதுவும் சூர்யாவுடன் இவர் கைகோர்த்தது, ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. மேலும், நஸ்ரியா, நஸ்லீன் என ரசிகர்களின் மனதை கவர்ந்த நட்சத்திரங்கள் இப்படத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மாபெரும் உச்சத்தை தொட்டது.

அத்தகைய எதிர்பார்ப்புடன் கடந்த நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக சீன் திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்க, முதல் நாளிலிருந்தே வசூல் மழை பொழிந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புது சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைத்து வரும் சீன் தற்போது 16 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.

இந்த நிலையில், இப்படம் இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 16 நாட்களில் உலகளவில் சீன் திரைப்படம் ரூ. 267 கோடி வசூல் செய்துள்ளது. ரூ. 300 கோடி என்கிற வசூல் சாதனையை சீன் படைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படம் உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா