Untitled Document
November 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ரூ. 2000 கோடி வசூல் செய்யுமா ராமாயணா?
[Saturday 2026-11-21 18:00]

ராமாயணா திரைப்படம் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரூ. 2000 கோடி வசூல் என்கிற இமாலய இலக்கை இப்படம் எட்டுமா, இதுவரை இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

தங்கல் எனும் மாபெரும் வெற்றி படத்தை இந்திய சினிமாவிற்கு கொடுத்த இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வெளியான திரைப்படம் ராமாயணா பார்ட் 1. இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் போன்ற உச்ச நட்சத்திரங்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Hans zimmer, ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

ராமாயணம் என்கிற பூரண கதையை மையமாக வைத்து இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், அவற்றுக்கு கிடைக்காத வரவேற்பு ராமாயணா திரைப்படத்திற்கு உலகெங்கும் கிடைத்துள்ளது. மக்கள் இப்படம் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், விரைவில் இப்படத்தை சீனாவில் வெளியிட படக்குழு முடிவு எடுத்துள்ளது.

ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 1600+ கோடி வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 2000 கோடிக்கும் மேல் வசூல் செய்யுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வெளியாகி 16 நாட்களில் ரூ. 1600+ கோடி வசூல் செய்துள்ள ராமாயணா, கண்டிப்பாக உலகளவில் ரூ. 2000 கோடியை கடக்கும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், தங்கல் திரைப்படத்தின் வசூலை முறியடித்து புதிய சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு: ராமாயணா வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா