Untitled Document
November 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மகள் குறித்து அவதூறு செய்திகள்: கோபத்தில் அர்ஜுன் எடுத்த அதிரடி முடிவு!
[Friday 2026-11-20 07:00]

தமிழ் சினிமாவில் அக்ஷன் கிங் அர்ஜுன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகர் அர்ஜுன். இவரது வீட்டில் கடந்த சில வருடங்களாக விசேஷங்கள் நடக்கிறது. அண்மையில் நடிகர் அர்ஜுன் இரண்டாவது மகளின் திருமணம் வெளிநாட்டில் கோலாகலமாக நடந்தது. நடிகர் அர்ஜுன் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2024ம் ஆண்டு நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அண்மையில் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் நடைபெற அதில் ஐஸ்வர்யா கலந்துகொண்டாலும் உமாபதி ராமைய்யா கலந்துகொள்ளவில்லை. இதனால் சிலர் திருமணம் ஆன சில வருடங்களில் பிரிந்துவிட்டார்கள் என பேச துவங்கினர்.

முக்கியமாக ஐஸ்வர்யா அர்ஜுன் அதிகம் மது அருந்தியதால் தான் கணவன்-மனைவி உறவுகளுக்குள் பிரச்சனை வந்தது என அவதூறுகள் பரவ துவங்கின.

இந்த அவதூறுகளை கண்ட நடிகர் அர்ஜுன் வெளியிட்ட அறிக்கையில், நடிகர்களாகிய நாங்கள் பொதுவாழ்க்கையில் இருக்கும்போது, ஊகங்களும் விமர்சனங்களும் தவிர்க்க முடியாதவை என்பதைப் புரிந்துகொண்டுள்ளோம்.

எந்தவித ஆதாரமும் இன்றி ஒரு பெண்ணை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று முத்திரை குத்துவது உள்ளிட்ட ஆதாரமற்ற மற்றும் இழிவான கருத்துகளைத் தெரிவிப்பது மிகவும் பொறுப்பற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.

அமைதி காப்பதே பல நேரங்களில் கண்ணியமான அணுகுமுறை என்று நாங்கள் நம்பி வந்திருக்கிறோம். இந்த விஷயத்தில் அப்படி முடியாது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான புகார் அளித்து உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா