Untitled Document
November 18, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 'ஜேம்ஸ் பாண்ட்' பட அறிவிப்பு!
[Tuesday 2026-11-17 16:00]

ஹாலிவுட் திரையுலகில் இருந்து இந்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த படம் 'ஜேம்ஸ் பாண்ட்'. இப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் ஹீரோவாக நடிக்கிறார். அதைப்பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம்.

ரசிகர்களின் விருப்பமான திரைப்பட சீரிஸில் ஒன்று 'ஜேம்ஸ் பாண்ட்'. கடந்த 1962-ஆம் ஆண்டு நடிகர் சீன் கானரி நடிப்பில் Dr. No என்கிற தலைப்பில் வெளியானது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம். இதை தொடர்ந்து ஜார்ஜ் லாசென்பி, ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் மற்றும் டேனியல் கிரெய்க் உள்ளிட்ட 6 நடிகர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். இதுவரை ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸில் 25 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கடைசியாக 2021-ஆம் ஆண்டு 'No Time to Die' திரைப்படம் வெளியானது. இதன்பின், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் எப்போது வெளியாகும், அதில் யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதில், சூப்பர் மேன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஹென்றி கேவில் பெயர் அடிபட்டது. ஆனால், தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக ராபர்ட் பேட்டின்சன்தான் புதிய ஜேம்ஸ் பாண்ட் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்; அதே சமயம் சில விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகின்றன.

ராபர்ட் பேட்டின்சன் ஜேம்ஸ் பாண்ட் என்று தெரிந்துவிட்டது. சரி, அப்படியானால் யார் பாண்ட் கேர்ள் என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில், Florence Pugh, ஜெண்டயா, Margaret Qualley, Gemma Chan, Inde Navarrette, Lupita Nyong’o, மற்றும் Sydney Sweeney போன்ற உச்ச ஹாலிவுட் நடிகைகளின் பெயர்களும் இதில் அடிபட்டு வருகின்றன. ஆனால், அதிகாரப்பூர்வமாக பாண்ட் கேர்ள் பற்றிய அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா