Untitled Document
November 17, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சீன் படத்தின் ஓப்பன்னிங் எப்படியிருக்கு? - ரஜினியே கேட்ட தகவல்!
[Sunday 2026-11-15 15:00]

நடிகர் ரஜினிகாந்த் சூர்யாவின் சீன் திரைப்படத்தின் ஓப்பன்னிங் எப்படி இருக்கிறது என்று விசாரித்துள்ளாராம். அதைப்பற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். ரஜினிகாந்த் இன்றும் தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஆக இருந்து வருபவர். இவருக்கு என உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெய்லர் 2 படம் உலகம் முழுவதும் ரூ. 830 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியது.

இதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் இத்தகைய வசூலை பாராட்டி, ரஜினியை சந்தித்து நினைவு பரிசெல்லாம் கொடுத்தார்கள். அவர்கள் பரிசு கொடுத்த அதே நாள்தான் சூர்யாவின் சீன் படம் வெளியானது, அதனால் ரஜினி அவர்களை சந்திக்கும் போது, சீன் படம் எப்படியிருக்கு? ஓப்பனிங் எல்லாம் எப்படி சூப்பரா? என கேட்டு தெரிந்துகொண்டதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதை பார்த்த எல்லோரும் இந்த பண்புதான் ரஜினியை இன்றும் உச்சத்தில் வைத்துள்ளது என பாராட்டி வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா