Untitled Document
November 11, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
5 நாட்களில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Wednesday 2026-11-11 16:00]

மூக்குத்தி அம்மன் 2 இந்த ஆண்டு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று. சுந்தர் சி இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, ரெஜினா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் இதுவரை 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருந்தது. இந்நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. அப்போதிலிருந்தே இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதன்படி, கடந்த ஆண்டு மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால், இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி, சரவணன் இயக்கவில்லை, இயக்குநர் சுந்தர் சி-தான் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ரெஜினா, ஊர்வசி, துனியா விஜய், யோகி பாபு, குஷ்பூ, சினேகா, மைனா நந்தினி, சிங்கம் புலி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த நவம்பர் 6-ஆம் தேதி வெளியான மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பு கிடைத்தது. சிலர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தனர். இதனால், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், உலகளவில் 5 நாட்களில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பொறுப்பு துறப்பு: நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உலகளவில் 5 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா