Untitled Document
November 10, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்ட இந்திய பிரபலங்கள்!
[Monday 2026-11-09 17:00]

அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இந்திய திரைத்துறை மற்றும் பிரம்மாண்ட தொழில்துறையின் இரு முன்னணி பிரபலங்களான பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் IPL-லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இணை உரிமையாளருமான காவ்யா மாறன் இடையிலான திருமணம் நவம்பர் 11ம் திகதி மத்திய தரைக்கடல் நாடான கிரீஸ் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

கிரீஸ் நடைபெறும் இந்த பிரம்மாண்ட திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய திரைத்துறையின் முக்கிய பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் விமானம் வழியாக புறப்பட்டு செல்லும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு.க. ஸ்டாலின் கிரீஸ் நாட்டிற்கு செல்வதற்காக இன்று விமான நிலையம் வந்தடைந்தார்.

அவரை போல, இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அவர்களும் தன்னுடைய குடும்பத்தினருடன் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக விமான நிலையம் வந்தடைந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் மிக முக்கிய பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதால் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

திருமணத்தை தொடர்ந்து அனிருத் - காவ்யா மாறன் தம்பதியின் வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21ம் திகதி சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த வரவேற்பில், பல்வேறு அரசியல், திரைத்துறை, விளையாட்டு மற்றும் தொழில்நுட்ப துறை சார்ந்த பல்வேறு முக்கிய ஆளுமைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், தெலுங்கானா முதலமைச்சர் ஏ.ரேவந்த் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா