Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
காதல் தோல்வி சர்ச்சை: மனம் திறந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்!
[Monday 2026-11-02 16:00]

நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் "நான் ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து வந்துவிட்டேன்" என மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறிய விஷயம் என்ன என்பதை விரிவாக இந்த பதிவில் பார்ப்போம். பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இதன்பின் தமிழில் என்ட்ரி கொடுத்த இவர், கொடி, தள்ளிப்போகாதே, சைரன், டிராகன், பைசன் மற்றும் லாக்டவுன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் காதலில் தோல்வியடைந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன வேதனையில் இருந்து கடினமான முயற்சிக்கு பின் மீண்டு வந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வைரலாகி வந்தன. இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பாக தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் மனநிலை குறித்து நடிகை அனுபமா பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது: "நான் ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து வந்துவிட்டேன். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும்; தற்போது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை; எனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சமீபத்தில் பகிர்ந்துகொண்டேன்; அதன் மூலம் என்னை விமர்சிப்பவர்களை தாண்டி, என் மீது உண்மையான அன்பு காட்டும் நல்லவர்கள் யார்யார் என்பதை நான் தெரிந்துகொண்டேன். அத்தகைய அன்பான மனிதர்களுக்காக நான் தொடர்ந்து பயணிப்பேன்" என மனம் திறந்து பேசினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா