Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நடிப்பை தாண்டி ரூ. 120 கோடி வருவாய் ஈட்டிய சமந்தா!
[Sunday 2026-11-01 18:00]

நடிகை சமந்தா தனது Secret Alchemist தொழில் நிறுவனம் மூலம் ரூ. 120 கோடி வருமானம் ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால், செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது கர்ப்பகால அனுபவம் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகை சமந்தா நடிப்பை தாண்டி Saaki, Tralala Moving Pictures போன்ற நிறுவனங்களை நடத்தி தொழிலதிபராகவும் வலம் வருகிறார். இதில் Secret Alchemist எனும் வாசனை திரவிய நிறுவனத்தில் இவர் இணை நிறுவனராக உள்ளார்.

அழகு மற்றும் நறுமண பொருட்களில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்த சமந்தா 2 ஆண்டுகள் அவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கையான நறுமண பொருட்களை உருவாக்கும் நோக்கில் அங்கிதா ததானி மற்றும் ஆகாஷ் வாலியா ஆகியோருடன் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த நிலையில், இந்த நிறுவனம் தொடங்கிய 8 மாதங்களிலேயே ரூ. 120 கோடி வருவாய் ஈட்டியுள்ளாராம் நடிகை சமந்தா. சினிமாவை தாண்டி தொழிலதிபராகவும் சமந்தா படைத்துள்ள இந்த சாதனை மிகப்பெரிய விஷயம் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா