Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மூக்குத்தி அம்மன் 2 முதல் விமர்சனம்!
[Sunday 2026-11-01 18:00]

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வருகிற நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் நிலையில், இப்படத்தை பார்த்த Executive தயாரிப்பாளர் தனது X பக்கத்தில் முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, படம் எப்படி இருக்கு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் சுந்தர் சி கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் உருவாகி இருப்பதால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், முதல் பாகத்தின் கதைக்கும் இப்படத்தின் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை என படக்குழுவினர் சமீபத்தில் நடைபெற்ற படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கூறியிருந்தனர்.

இப்படத்தில் ரெஜினா வில்லியாக நடித்துள்ளார். டிரைலர் வெளியானதில் இருந்து இவருடைய கதாபத்திரத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் ஊர்வசி, சினேகா, குஷ்பூ, யோகி பாபு, துனியா விஜய், மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார். வருகிற நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக மூக்குத்தி அம்மன் 2 வெளியாகிறது.

இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை பார்த்த பிரபல Executive தயாரிப்பாளர் தனது X பக்கத்தில் முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இந்த பதிவில், #Mookuthiamman என்று குறிப்பிட்டு, அதன்பின் முழுமையாக Fire எமோஜிகளை பதிவிட்டுள்ளார். இதன்மூலம் படம் சிறப்பாக வந்துள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இவருடைய பதிவின்படி படம் அமைந்தால் இந்த தீபாவளி மூக்குத்தி அம்மன் 2 தீபாவளியாக கூட மாற வாய்ப்புள்ளது.

மேலும், இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இருந்து வெளியான கட்டா குஸ்தி 2, மீசைய முறுக்கு 2 மற்றும் ஜெயிலர் 2 என அனைத்து இரண்டாம் பாக திரைப்படங்களும் மாபெரும் வெற்றிபெற்றன. அந்த வரிசையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படமும் இணையுமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா