Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட கிங் திரைப்படம்!
[Saturday 2026-10-31 16:00]

ஷாருக்கான் நடிப்பில் உருவாகி டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும் கிங் திரைப்படத்தின் வெளிநாட்டு திரையரங்க உரிமம் விற்பனை தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கிங். இப்படத்தில் ஷாருக்கானின் மகள் சஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, அனில் கபூர் என பாலிவுட் திரையுலகின் பல உச்ச நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, அப்படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரம், வியாபார விவரம் ஆகியவை இணையத்தில் வெளியாகும். இந்த நிலையில், கிங் திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கிங் திரைப்படத்தை Phars Film நிறுவனம் ரூ. 175 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இப்படம் தனது முதலீட்டை ஈடுகட்ட சுமார் 45 மில்லியன் டாலர் வருமானம் ஈட்ட வேண்டியிருக்கும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா