Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அனைவரும் எதிர்பார்த்த 'வேட்டுவம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!
[Saturday 2026-10-31 16:00]

வேட்டுவம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குநர் பா. ரஞ்சித் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்; அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. அட்டகத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை, தங்களான் உள்ளிட்ட பல தரமான திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தவர் இயக்குநர் பா. ரஞ்சித். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் 'வேட்டுவம்'.

Sci-Fi ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ், சோபிதா துளிபாளா, கலையரசன், ஷபீர் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும், ரூ. 75 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் ஸ்டண்ட் திலீப் சுப்பராயன், கலை இயக்குநராக எஸ்.எஸ். மூர்த்தி மற்றும் செல்வா ஆர்.கே எடிட்டராக பணியாற்றியுள்ளனர். சமீபத்தில் வெளிவந்த world of வேட்டுவம் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்தை எப்போது திரையில் காண்போம் என காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதன்படி, வேட்டுவம் திரைப்படம் வருகிற 2027 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா