Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இயக்குனர் நெல்சனின் அடுத்த படத்தின் ஹீரோ!
[Tuesday 2026-10-20 08:00]

ஜெயிலர் 2 வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமாரின் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் இணையத்தில் உலா வருகிறது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக மாறியுள்ளார் நெல்சன் திலீப்குமார். இவர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜெயிலர் 2 உலகளவில் அமோக வரவேற்பை பெற்று இதுவரை ரூ. 425 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக ரூ. 750 கோடிக்கும் மேல் மொத்தமாக வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் 2 வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் - கமல் ஹாசனின் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் அதன்பின், இப்படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் இல்லாதது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. ஜெயிலர் 2 வெற்றியடைந்துள்ள நிலையில், விரைவில் அப்டேட் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் புதிதாக Hombale Films நிறுவனத்துடன் படம் பண்ண கமிட்டாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் கதாநாயகனாக நடிக்கப்போவதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் வந்த அசத்திய ஹ்ரித்திக் ரோஷன், அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறாரா என ரசிகர்களிடையே பேச்சு எழுந்துள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா