Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காரணம் என்ன? பொறுப்பேற்ற பிஷ்னோய் கும்பல்
[Monday 2026-10-19 15:00]

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. அதற்கான காரணம் என்னவென்று என்பதையும் தெரிவித்துள்ளது. பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் டைகர் ஷெராப். இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஜுஹு பகுதியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு தனது காரில் கிளம்பியபோது, திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் நடிகர் டைகர் ஷெராப் லேசான கீறல்களுடன் உயிர் தப்பினார். ஆனால், கார் டிரைவர் மற்றும் அருகில் இருந்து ஆட்டோ டிரைவர் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நடிகர் டைகர் ஷெராப்பை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு கடும் அதிர்ச்சியை பாலிவுட் திரையுலகினருக்கு கொடுத்துள்ளது.

இச்சம்பவம் நடந்த தகவல் அறிந்த போலீஸ் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய குற்றப்பிரிவு மற்றும் உள்ளூர் காவல்துறையினரை கொண்டு 15 தனிப்படைகளை அமைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தடயவியல் நிபுணர்கள், சேகரித்து தடயங்களை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடந்து சிறு காயங்களுடன் தப்பிய நடிகர் டைகர் ஷெராப்பை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. நடிகர் சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றியதால்தான் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா