Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிரபல பாலிவுட் நடிகரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளை பிடிக்க 15 குழுக்கள் அமைப்பு!
[Monday 2026-10-19 07:00]

பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபை குறிவைத்து மும்பையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் ஜூஹூவில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.// இந்த தாக்குதலில் டைகர் ஷெராஃபின் ஓட்டுநர் ஃபிர்தோஷ் மற்றும் அங்கிருந்த மற்றொரு நபர் பலத்த காயமடைந்தனர்.

ஆரம்பக்கட்ட தகவலின் படி, டைகர் ஷெராஃப் இந்த தாக்குதலில் எந்தவொரு காயமும் இன்றி பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது ஓட்டுநர் பிர்தோஷின் இடது கையில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைகர் ஷெராஃபை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்த கும்பல் சமீபத்தில் நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டைகர் ஷெராஃபை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த 15 தனிப்படை குழுக்களை அமைத்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை ஆணையரிடம் முதலமைச்சர் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா