Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்!
[Saturday 2026-10-17 17:00]

பிரபல இசையமைப்பாளர் தேவா(76) காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 400க்கும் மேலான மொழிகளில் இசையமைத்துள்ளார். குறிப்பாக கானா பாடாலை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கானா பாடலைத் தவிர்த்து மெலடி, குத்துப் பாடல் மற்றும் வெஸ்டர்ன் ஸ்டைலிலும் கலக்கினார். இதனால் தேனிசைத் தென்றல் என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்பட்டார். 1986ஆம் ஆண்டு மாட்டுக்கார மன்னார் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானர்.

பின்பு ஆத்தா உன் கோயிலிலே, ஒயிலாட்டம், உனக்காக பிறந்தேன் என ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் ரஜினியின் அண்ணாமலை, பாட்ஷா மற்றும் அருணாச்சலம் கமலின் அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் மற்றும் பம்மல் கே சம்பந்தம், விஜய்யின் தேவா, குஷி, மின்சார கன்னா அஜித்தின் ஆசை, காதல் கோட்டை, வாலி, சிட்டிசன் என இன்றைய அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் இசையமைத்துள்ளார்.

90 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தார். அந்த சமயத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என இரு ஜாம்பவான்கள் கோலோச்சி இருந்த காலத்தில் தனது கானா பாடல் மூலம் தடம் பதித்து தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறினார். இவரது பாடல்கள் இந்தியாவைத் தாண்டி வெளிநாட்டிலும் ரசித்த சம்பவம் இருக்கிறது. சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் தனது இறுதி அஞ்சலிக்கு தேவா இசையமைத்த ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலை ஒலிக்க செய்ய சொல்லிக் கேட்டுக்கொண்டார்.

அதன் படி அவரது இறுதிச் சடங்கில் இந்த பாடல் ஒலிக்கப்பட்டது. இதனை ரஜினி தேவா நடத்திய ஒரு இசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். ரஜினிக்கு தேவா இசையமைத்த டைட்டில் டிராக் தான் இன்றைக்கு அவருக்கு ஒரு பக்கபலமாக இருக்கிறது. அந்த டைட்டில் டிராக் ‘அண்ணாமலை’ படத்தில் முதல் முதலில் தேவா உருவாக்கினார். பின்பு அதுவே ரஜினிக்கு ஒரு அடையாளமாக மாறி அண்மையில் வெளியான ‘ஜெயிலர் 2’ படம் வரையிலும் பயன்படுத்தப்பட்டது. இந்த டிராக்குக்கென்ற தனி ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பதைத் தாண்டி பாடகராகவும் புகழ் பெற்றார். குறிப்பாக இவர் இசையில் ‘ஒயிட் லகான்’, ‘மீசைக்கார நண்பா’, ‘சலோமியா’ மற்ற இசையமைப்பாளர்களில் பாடிய ‘ஓபன் தி டாஸ்மாக்’(அனிருத் - மான் கராத்தே), ‘ஜித்து ஜிலாடி’(ஜிவி பிரகாஷ் - தெறி), ‘மஞ்சனத்தி புராணம்’(கர்ணன் - சந்தோஷ் நாராயணன்) உள்ளிட்ட பாடல்கள் ஹிட்டடித்தது. கடைசியாகச் சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்த ‘போட்’ படத்தில் ‘தகிட ததிமி’ பாடலை பாடியிருந்தார்.

சினிமாவில் கிட்டத்தட்ட 4 தசாப்தங்களாக பயணித்து வந்தவர் சமீப காலமாக குறைவான படங்களுக்கே இசையமைத்து வந்தார். கடைசியாக கடந்த ஜூனில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ‘சாருகேசி’ படத்திற்கு இசையமைத்திருந்தார். கடந்த வருடம் தனது தம்பி சபேஷ் இறந்ததால் படும் சோகத்தில் இருந்த அவர் அதற்கடுத்து பெரிதளவில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். அண்மையில் மீசைய முறுக்கு 2 பட விழாவில் கலந்து கொண்டு தனது ஆரம்பக் கால வாழ்க்கையில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி தற்போது இறந்துள்ளார். இவரது மறைவு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா