Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜெயிலர் 2 திரைப்படம் எப்படி இருக்கு? - எல்லோரும் எதிர்பார்த்த அனிருத்தின் விமர்சனம்!
[Wednesday 2026-10-14 16:00]

ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான தனது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் பதிவு செய்துள்ளார். 2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக ஜெயிலர் 2 உள்ளது. தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி வசூல் திரைப்படமாகவும் இதுவே அமையும் என்கிற எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் வைத்துள்ளனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சுராஜ், சிவராஜ், மோகன்லால், ஹ்ரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நாளை இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது.

இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் பெரிய திரைப்படங்களுக்கு விமர்சனம் தெரிவிப்பது வழக்கம்தான். அந்த வகையில், ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

இதில், "தலைமுறை தலைமுறையாக அவர் நமக்கு மகிழ்ச்சி, சிரிப்பு, மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் நினைவுகளை வழங்கியுள்ளார். 76 வயதிலும், கடந்த 51 ஆண்டுகளாக, அவர் தொடர்ந்து வரலாற்றை புதிதாக எழுதி வருகிறார். ஒரு சூரியன். ஒரு சந்திரன். And One" என பதிவிட்டுள்ளார்.

அனிருத்தின் இந்த விமர்சனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் இரட்டிப்பு ஆக்கியுள்ளது என்றும், கண்டிப்பாக ஜெயிலர் 2 இண்டஸ்ட்ரி ஹிட் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா