Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜெய் அனுமான் திரைப்படத்தில் நடிகை மமிதா பைஜூ!
[Monday 2026-10-12 16:00]

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான மமிதா பைஜூ ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து ஜெய் அனுமான் திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேமலு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதை வென்றவர் மமிதா பைஜூ. தமிழில் ரெபெல் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து Dude, கர, ஜனநாயகன் மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது.

காந்தாரா படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் ரிஷப் ஷெட்டி. இவர் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் ஜெய் அனுமான். இப்படத்தை இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

இந்த நிலையில், ஜெய் அனுமான் திரைப்படத்தில் நடிகை மமிதா பைஜூ கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நேரடியாக தெலுங்கு திரையுலகில் மமிதா காலடி எடுத்து வைத்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா