Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்: அதிர்ச்சியில் திரையுலகம்!
[Thursday 2026-10-08 16:00]

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானார். அவருக்கு வயது 75. பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நானா படேகர். இவர் தமிழில் வெளியான பொம்மலாட்டம், காலா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கோவாவில் உள்ள தனது வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடிகர் நானா படேகரை, உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் பரிசோதனையின் பின் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட ஆய்வின்படி, அவருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு மருத்துவர்கள் 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக அவருக்கு சிபிஆர் (CPR) அளித்தும், அவரை மீண்டும் உயிர் பெறச் செய்ய முடியவில்லை. மேலும், ஒரு மருத்துவ-சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் நானா படேகரின் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா