Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அனைவரும் காத்திருந்த இந்தியன் 3 படத்தின் அப்டேட் வெளியானது!
[Thursday 2026-10-08 16:00]

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. ஷங்கர் - கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியன் 2 வெளியானது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு 2024-ஆம் ஆண்டு வெளியான இப்படம் படுதோல்வியைச் சந்தித்தது. மேலும், கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது. இந்தியன் 2 திரைப்படம் தோல்வியை சந்தித்தாலும் கூட, இந்தியன் 3 திரைப்படத்திக்கென்று தனி எதிர்பார்ப்பு இருந்தது. ஆகையால் இந்தியன் 3 அப்டேட் எப்போது என தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், லைகா நிறுவனம் இந்தியன் 3 திரைப்படத்திற்கான அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. "Senapathy is back with zero tolerance. The resurgence begins in Indian 3 War Mode" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியன் 3 அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. அதே சமயம் இந்த படத்தையாவது சொதப்பாமல் மக்களுக்கு பிடித்தவாறு எடுங்கள் என பலரும் விமர்சனங்களையும் கூறி வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா